பதிவு செய்த நாள்
21 ஆக2020
11:21

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் நேற்று 400 புள்ளிகள் வரை சரிவை சந்தித்த நிலையில் இன்று(ஆக.,21) 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 38,551.15ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 98.05 புள்ளிகள் உயர்ந்து 11,410.25ஆகவும் வர்த்தகமாகின.
அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தது, அதன் எதிரொலியாக ஹாங்காங், டோக்கியோ, சியோல் உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டது, உள்நாட்டில் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியது, ரூபாயின் மதிப்பு ஏற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காலை 11மணியளவில் சென்செக்ஸ் 272 புள்ளிகளும், நிப்டி 76 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.74.90ஆக வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் நிலை ஏற்றம்
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.33 சதவீதம் உயர்ந்து 45.05 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|