புதிய நிறுவனம் துவக்க என்.டி.பி.சி.,க்கு அனுமதி புதிய நிறுவனம் துவக்க என்.டி.பி.சி.,க்கு அனுமதி ... தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது ...
அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
01:40

மும்பை:ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், நாட்டின் ஏற்று மதி அதிகரித்து வரும் நிலையில், சீனாவுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, 78 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.


அதேசமயம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி சரிந்துள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, மைனஸ் 60.2 சதவீதம் அளவுக்கு சரிந்த நிலையில், ஜூலையில் மைனஸ் 10.2 சதவீதம் என்ற அளவுக்கு மீட்சியை கண்டது.

தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதியும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.ஏற்றுமதி வீழ்ச்சியில், மே மாதத்தில் 50 சதவீதம் அளவுக்கும்; ஜூன் மாதத்தில், 30 சதவீதம் அளவுக்கும் மீட்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நிலைமைகள் முற்றிலும் மாறி, சீனாவுக்கான ஏற்றுமதி, 78 சதவீதமாகவும், மலேஷியாவுக்கு, 76 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.


இந்த காலகட்டத்தில், அங்கு கொரோனா பாதிப்புகள் வீழ்ச்சிஅடைந்திருந்தன. நாட்டின் ஏற்றுமதியில், கிழக்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பு, 16 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால், மேற்கு நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து, அவற்றை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறிக் கொண்டிருந்தது, ஏற்றுமதி சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி, மைனஸ் 53.2 சதவீதமாகவும்; பிரிட்டனுக்கான ஏற்றுமதி மைனஸ் 38.8 சதவீதமாகவும்; அமெரிக்காவுக்கானது மைனஸ் 11.2 சதவீதமாகவும்; பிரேசிலுக்கானது மைனஸ் 6.3 சதவீதமாகவும் சரிவைக் கண்டன.இதை வைத்து பார்க்கும் போது, ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் நிலைக்கு ஏற்ப, நிலைமை களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சீனாவை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு, மற்ற நாடுகளை விட மிகவும் முன்பாகவே ஏற்பட்டு, சீராகிவிட்டது.இதனால் அதன் பொருளாதாரம், ஜூன் காலாண்டில், 3.2 சதவீத வளர்ச்சியை கண்டது. ஆனால், பிற நாடுகள் பலத்த சரிவைக் கண்டன.பொருட்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இரும்பு தாது ஏற்றுமதி, 63 சதவீதம் அளவுக்கும்; அரிசி, 33 சதவீதமும்; மசாலா பொருட்கள், 23 சதவீதமும்; ரசாயனம், 19 சதவீதமும்; மீன், 11 சதவீதமும்; மருந்து, 10 சதவீத மும் மீட்சி கண்டுள்ளன.

சீனாவிலிருந்து வரும் இறக்குமதி, இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே குறைந்து, ஜூன் மாதத்தில், மைனஸ் 60 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் பெருமளவு சரிந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)