பதிவு செய்த நாள்
24 ஆக2020
00:31

வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம், அதிக பலன் தருவதாக அமைந்துள்ளதால் வயதானவர்களுக்கு ஈர்ப்புடையதாக அமைகிறது. கொரோனா முடக்கம் பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம், 7 சதவீதத்திற்கும் குறைந்துள்ளது.
மாத வருமானத்திற்காக வைப்பு நிதி முதலீட்டை அதிகம் நாடும் வயதானவர்கள், இந்த போக்கால் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், ‘சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும், 60 வயதுக்கு மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம் ஈர்ப்புடையதாக அமைகிறது. இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போது, 7.4 சதவீதமாக அமைகிறது.
சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் வரும், இந்த சேமிப்பு திட்டத்தில், 55 வயதுக்கு மேல் ஆனவர் 0களும், விருப்பு ஓய்வு பெற்றிருந்தால் முதலீடு செய்யலாம். சிறுசேமிப்பு திட்டங்களில் இதுவே அதிக வட்டி அளிக்கிறது. இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.இதன் கீழ் செய்யப்படும் முதலீட்டிற்கு வரிச்சலுகை உண்டு. எனினும், வட்டி வருமானம் வரி விதிப்புக்கு பொருந்தும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|