பதிவு செய்த நாள்
24 ஆக2020
21:10

புதுடில்லி:இந்திய மூலதன சந்தைகளில், தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த, 3ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், மொத்தம், 41 ஆயிரத்து, 330 கோடி ரூபாயை சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.இதில், 40 ஆயிரத்து, 262 கோடி ரூபாயை பங்குகளிலும், 1,068 கோடி ரூபாயை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.
இது குறித்து, மார்னிங் ஸ்டார் நிறுவனத்தின் துணை இயக்குனர் ஹிமன்ஷு ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:அமெரிக்கா தொடர்ந்து பணத்தை அச்சடித்து வெளியிட்டு வருகின்றது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட வளரும் சந்தைகளில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது.
எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால், இந்தியா உள்ளிட்ட வளரும் சந்தைகளில் அதிகளவு முதலீட்டை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|