பதிவு செய்த நாள்
27 ஆக2020
00:47

சென்னை, ஆக. 27–
கடந்த மே மாதத்தில் நாடு முழுவதிலும், 1.34 லட்சம் பேரும்; தமிழகத்தில், 26 ஆயிரம் பேரும் பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் இணைப்பிலிருந்து வெளியேறி உள்ளதாக, தொலைத் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ மாதம் தோறும் வெளியிடும்.மே மாதத்தின் விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, தொலைத் தொடர்பு அதிகாரிகள் கூறியதாவது:
தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில், 116.94 கோடியாக இருந்தது,மே மாதத்தில், 116.36 கோடியாக குறைந்துள்ளது. ஒரு மாதத்தில், 58 லட்சம் இணைப்புகள் குறைந்து, 0.49 சதவீதம் சரிந்துள்ளது.இதில் மொபைல் போன் இணைப்பு, 5.61 சதவீதமும், லேண்ட்லைன் இணைப்பு, 0.15 சதவீதமும் சரிவடைந்துள்ளது. மொபைல் எண் போர்டபிலிட்டி சேவைக்காக, 49.12 கோடி வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இது, ஏப்ரலில், 48.82 கோடியாக இருந்தது.
தமிழகத்தில் மட்டும், 4.05 கோடி பேர் விண்ணப்பித்து உள்ளனர்.மேலும், லேண்ட்லைன் இணைப்பில், பி.எஸ்.என்.எல்.,லில் இருந்து, 1.34 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து, 26 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.பிராட்பேண்ட் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, மாதத்திற்கு, 1.13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|