பதிவு செய்த நாள்
27 ஆக2020
01:07

புதுடில்லி:வாராக் கடன்களை நிர்வகிப்பதற்காக, தனியாக ஒரு வாராக் கடன் வங்கியை அமைப்பது என்பது தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும் ஆகும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில், வாராக் கடன்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், வாராக் கடன்களை நிர்வகிக்க தனியே ஒரு வங்கி அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உலகில் திறமையாக வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கும் வாராக் கடன் வங்கிகள் பல இருக்கின்றன. உதாரணமாக, மலேஷியாவில் இருக்கும் டானஹர்த்தா வங்கியை சொல்லலாம். நம் நாட்டில் ஒரு வாராக் கடன் வங்கியை அமைப்பதற்கு, இந்த வங்கி நல்ல மாதிரியாக இருக்கும்.வாராக் கடன் வங்கியின் முக்கிய நன்மை என்னவென்றால் ஊழல் இருக்காது. வட்டியிலும் தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்காது.\
தற்போதைய திவால் சட்ட கட்டமைப்புகள்போதாது. கூடுதல் சுமையை அவற்றால் சமாளிக்க முடியாது. எனவே தனியாக வாராக் கடன் வங்கி அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம், 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் எனும் பட்சத்தில் வாராக் கடன்கள் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.மேலும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், மார்ச், 2021ல், வாராக் கடன், 12.5 சதவீதம் அதிகரிக்கும் என கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|