பதிவு செய்த நாள்
27 ஆக2020
23:39

புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடந்த, 24ம் தேதி வரை, மொத்தம், 1.56 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுகுறித்து, நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 24ம் தேதி வரை, மொத்தம், 1 லட்சத்து, 55 ஆயிரத்து, 995 கோடி ரூபாய் கடன்களுக்கான அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது, இதில், 1 லட்சத்து, 5 ஆயிரத்து, 926 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.
இந்த கடன்கள், 12 பொதுத் துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த, 24ம் தேதி வரை, பொதுத் துறை வங்கிகள் மூலம், 76 ஆயிரத்து, 765 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதிகள் கொடுக்கப்பட்டு, 47 ஆயிரத்து, 696 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.
தனியார் துறை வங்கிகள், 79 ஆயிரத்து, 230 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் கொடுத்து, 47 ஆயிரத்து, 696 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கடந்த, 18ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது, 5,236 கோடி ரூபாய் அதிகம் வழங்கப்பட்டுள்ளது.அதிகபட்ச கடன்களை, எஸ்.பி.ஐ., வங்கி வழங்கி இருக்கிறது. இதற்கடுத்த இடத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|