பதிவு செய்த நாள்
27 ஆக2020
23:44

புதுடில்லி:சீனாவை சேர்ந்த,‘அலிபாபா குழுமம், இந்தியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அலிபாபா குழுமம், இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும்.
குறிப்பாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எல்லையில் சீனா மோதலை மேற்கொண்ட காரணத்தால், இந்தியாவுடனான வணிக உறவுகள் குறைந்து, அரசியல் அழுத்தங்கள் அதிகரித்திருப்பதை அடுத்து, அலிபாபா இத்தகைய முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து விபரம் அறிந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:அலிபாபா குழுமம் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு புதிய முதலீடுகள் எதையும் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டாம் என கருதியுள்ளது. இருப்பினும், ஏற்கனவே மேற்கொண்டிருக்கும் முதலீடுகளிலிருந்து வெளியேறவோ அல்லது பங்குகளை குறைத்துக் கொள்ளவோ நிறுவனம் விரும்பவில்லை.
புதிதாக இந்தியாவிலுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கருதுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், இது குறித்து அலிபாபா குழுமம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை; பதிலும் தெரிவிக்கவில்லை.
அலிபாபா மற்றும் அதன் துணை நிறுவனங்களான, அலிபாபா கேப்பிடல் பார்ட்னர்ஸ் மற்றும் ஆன்ட் குழுமமும், 2015ம் ஆண்டு முதல், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன.மேலும், குறைந்தபட்சம், 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி சுற்றுகளிலும் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|