பதிவு செய்த நாள்
28 ஆக2020
08:00

சீன நிறுவனமான ரியல்மி ஸ்மார்ட் போன்களின் சி சீரிஸ் ரக போன்களான சி12 மற்றும் சி15 பெற்ற வரவேற்பை தொடர்ந்து அந்நிறுவனம் இப்போது புதிதாக ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7புரோ என்ற இரண்டு புதிய போன்களை வருகிற செப்., 1ம் தேதி சீனாவிலும், செப்.,3ம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்கிறது. இதன் போன்களின் சிறப்பு அம்சங்கள் என்ன, விலை என்ன என்பதை இங்கு பார்ப்போம்...
ரியல்மி 7 ஸ்மார்ட் போனின் முக்கிய சிறப்பு அம்சமே பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 65 வாட் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும். 0 முதல் 100 சதவீதம் சார்ஜிங் வசதியை பெற வெறும் 32 நிமிடங்கள் போதுமானதாகும். இதன்மூலம் இந்தியாவில் அதிவேக பார்ஸ் சார்ஜிங் வசதி கொண்ட போன் என்ற பெருமை இந்த ரக போன்களுக்கு கிடைக்கும். இத்துடன் 2-ஆம் 64எம்.பி., குவாட் கேமரா செட்டப் செய்யப்பட்டுள்ளது. பிங்கர் பிரிண்ட், சென்சார் போன்ற வசதிகளும் இந்த போனில் இருக்கும்.
முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இந்த ரக போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலை போன்களாக இந்த மாடல்கள் இருக்கும். அதிகப்பட்சம் ரூ.15 ஆயிரம் விலைக்குள் இந்த போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி மற்றும் பிலிப்கார்ட் இணையதளங்களில் இந்த போனின் விற்பனை துவங்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|