பதிவு செய்த நாள்
30 ஆக2020
00:36

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனத்தை அதிகரிப்பது உள்ளிட்டவற்றால், நாட்டின் ஜி.டி.பி., எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை, 2--–3 சதவீதம் அளக்கு அதிகரிக்கலாம் என, பி.இ.எஸ்.பி. எனும், பொது நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த நிகர மதிப்பு, 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.இவற்றின் நிதியை அதிகப்படுத்துவதன் மூலமும், மூலதன செலவுகளை அதிகரிப்பதன் மூலமும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை, 2_3 சதவீதம் அதிகரிக்க இயலும்.
பொதுத்துறை நிறுவனங்கள், தங்களை உயர்த்திக்கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அதுமட்டுமன்றி, ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தினை கட்டமைப்பதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும்.கடந்தம் 5 – 6 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தனியார் துறை நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வதிலிருந்து விலகி வருவதால், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் முதலீட்டாளர்களாக உள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|