பதிவு செய்த நாள்
30 ஆக2020
00:43

மும்பை:கிராமப் புற தேவைகள், பொருளாதார மீட்சிக்கு உதவும் என்றாலும், அவை நகர்ப்புற தேவைகளுக்கு ஈடாகாது என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு, கிராமப் புற தேவைகள் உதவும் என்றாலும், அவை நகர்ப்புற தேவைகளுக்கு ஈடாகாது.கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீள, தொழில் துறை மற்றும் சேவைகள் துறை இன்னும் போராடி வரும் நிலையில், விவசாயத் துறை, பொருளாதார மீட்சிக்கான உந்துசக்தியாக மாறக்கூடும்.
"நாட்டின் ஜி.வி.ஏ., எனும், மொத்த மதிப்பு கூட்டில், விவசாயத்தின் பங்கு, சுமார், 17 சதவீதம் என்பதால், கிராமப்புற தேவை நுகர்வு தேவையை அதிகரிக்க உதவும் என நம்பலாம். ஆனால், அது நகர்ப்புற தேவைக்கு மாற்றாக இருக்க முடியாது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 17.03 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்புக் கணக்கு சுமார், 1,800 கோடி அமெரிக்க டாலர் உபரியை பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முடக்கப்பட்ட போதும், அதன் பிறகும் ஒரே ஒரு துறை மட்டுமே பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அது, விவசாயத் துறையாகும். நடப்பு ஆண்டில், இந்த துறை, 3.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை காணும்.ஆனால், விவசாயப் பொருட்கள் அதிகம் விளைச்சல் காணும்போது, அவற்றின் விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், விவசாய வருமானம் பாதிக்கப்படக்கூடும்.
அரசு, இதை தொடர்ந்து கண்காணித்து, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாய உற்பத்தி, கிராமப்புற தேவையை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, நாடு முடக்கப் பட்டதை அடுத்து, கிராமங்களுக்கு சென்றுவிட்ட தொழிலாளர்களாலும் கிராமப்புற தேவைகள் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|