‘பென்ஷன்’ திட்டத்தில் சலுகை அறிவிப்பு ‘பென்ஷன்’ திட்டத்தில் சலுகை அறிவிப்பு ...  விமான நிலையங்கள் துறை ‘டேக் ஆப்’ ஆகும் அதானி விமான நிலையங்கள் துறை ‘டேக் ஆப்’ ஆகும் அதானி ...
முடிந்தது ரிலையன்ஸ் ‘டீல்’ ஏற்றத்தில் ‘பியூச்சர்’ பங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
22:06

புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை, மொத்த விலை, கிடங்குகள், சரக்கு போக்குவரத்து ஆகிய வணிகங்களை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு வாங்கியதை அடுத்து, பியூச்சர் நிறுவன பங்குகள் விலை, நேற்று சந்தையில் உயர்வைக் கண்டன.

ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் விலை, துவக்கத்தில் அதிகரித்த போதிலும் பங்குச் சந்தையின் சரிவு காரணமாக, இதன் பங்குகள் விலையும் சரிந்தது.தேசிய பங்குச் சந்தையின், நிப்டி பிரிவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை, துவக்கத்தில், 2.66 சதவீதம் அதிகரித்த போதிலும் வர்த்தகத்தின் இறுதியில் விலை, 2.18 சதவீதம் சரிந்து, 2,070 ரூபாயாக குறைந்தது.

ரிலையன்ஸ் போலவே, பியூச்சர் குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலையும் அதிகரித்தன. பியூச்சர் ரீட்டெய்ல் நிறுவன பங்குகள் விலை, 19.99 சதவீதம் அதிகரித்து, 162.35 ரூபாயாக உயர்ந்தது. பியூச்சர் என்டர்பிரைசஸ் பங்குகள் விலை, 4.98 சதவீதம் அதிகரித்து, 21.10 ரூபாயாக உயர்ந்தது.பியூச்சர் கன்ஸ்யூமர் நிறுவன பங்குகள் விலையும், 4.80 சதவீதம் அதிகரித்து, 12 ரூபாயாக உயர்வைக் கண்டது.

மேலும், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன் நிறுவன பங்குகள் விலையும், 4.98 சதவிகிதம் அதிகரித்து, 152.80 ரூபாயாக உயர்ந்தது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துணை நிறுவனமான, ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்’ பியூச்சர் குழுமத்தின் பல வணிகங்களை கையகப் படுத்தியதை அடுத்து, பிக்பஸார் உள்ளிட்டவை ரிலையன்ஸ் வசம் வந்துள்ளது.இருப்பினும், இந்த டீலில் பியூச்சர் குழுமத்தின் நிதி மற்றும் காப்பீட்டு வணிகங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)