சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டனசரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன ... மீண்டும் மெல்ல உயரும் தங்கம் விலை மீண்டும் மெல்ல உயரும் தங்கம் விலை ...
வட்டிக்கு வட்டி; நிவாரணமா? வியாபாரமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2020
11:36

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீடித்த ஊரடங்கால், பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள், கொஞ்சம் நிம்மதி மூச்சு விடுவதற்காக, ஆக., 31ம் தேதி வரை கடன் தவணைகளை கட்டாயப்படுத்தி, வங்கிகள் வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

தொழில், வர்த்தகம் முடங்கியுள்ளதால், வங்கிக்கடன் தவணை செலுத்த வழங்கப்பட்டுள்ள ஆறு மாத அவகாச காலத்தில், கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். செலுத்தாத தவணையின் வட்டி மீது, கூடுதல் வட்டி வசூலிப்பதையும் தடுக்க வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ‘அவகாச காலத்தில், வங்கிக் கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்வதால், வங்கிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பாதிக்கப்படுவர். அவகாச காலம் முடிந்த பின், வங்கிகளின் விதிமுறைப்படி தவணைத் தொகை மற்றும் வட்டி வசூலிக்கப்படும்’ என்றது.


நியாயமற்ற நடவடிக்கை
‘கடன் தவணை செலுத்த அவகாசம் நிர்ணயிக்கப்பட்டால், அதற்கான நோக்கமும் நிறைவேற வேண்டும். எனவே, அவகாச காலத்தில் தவணை மீது வட்டி வசூலிப்பதும், வட்டி மீது கூடுதல் வட்டி வசூலிப்பதும் நியாயம் அல்ல’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘ஆறு மாத தவணை காலத்தில், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில், மத்திய அரசு சுயமாக முடிவு எடுக்க வேண்டும். வங்கி நலனில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது’ என்று கருத்து தெரிவித்தனர். வங்கிகள், இரண்டு விதமான கடன்கள் வழங்குகின்றன. ஒன்று, தனி நபர் கடன். மற்றொன்று வணிக கடன். கடன் தவணை வசூலும், அதிலிருந்து கிடைக்கும் வட்டியுமே, வங்கி அமைப்பின் ஆதாரம். நடைமுறையில் பார்த்தால், வங்கி அமைப்புகளும் ஒரு வணிக நிறுவனம் தான். பொதுமக்களிடம் இருந்து டிபாசிட் பெறுகின்றன. அதை வைத்து பல்வேறு வகைகளிலும் கடன் வழங்குகின்றன. அந்த கடன் தொகையில் இருந்து பெறப்படும் வட்டியில் தான், டிபாசிட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது. டிபாசிட் செய்பவர்களும், கடன் பெறுபவர்களும் இல்லையென்றால், வங்கிகளுக்கு பெரிய அளவில் வேலை இல்லை. வட்டி வசூல்தான் வங்கி வணிகத்தின் அடிப்படை.

முதியோருக்கு பாதிப்பு
அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில், பொதுமக்களால், சுமார் ரூ.133 லட்சம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும், சீனியர் சிட்டிசன்களின் ஓய்வு கால வாழ்க்கை, வங்கி வட்டியை கொண்டே ஓடுகிறது. முன்பு, சீனியர் சிட்டிசன்களுக்கு, 9 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. இப்போது, 6 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, ஆறு மாதத்துக்கான வட்டியை முழுவதும் தள்ளுபடி செய்வதோ, அல்லது வட்டிக்கு வட்டி போடுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளோ வங்கிகளுக்கு கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். இது, டிபாசிட்டாளர்களுக்கு கொடுக்கும் வட்டியை குறைக்க துாண்டும் செயலாக மாறலாம்.

எப்படி வழங்கலாம்?
ஏற்கனவே, எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்கள் சிக்கல்களில் இருந்து விடுபட, மத்திய அரசு, வங்கிகள் மூலமாக, 3 லட்சம் கோடி கடன் திட்டம் அறிவித்தது. இதுவரை சுமார், 1.60 லட்சம் கோடி எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்களுக்கு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கொரோனா தொற்று காலத்தில், வேலை மற்றும் தொழில் இழந்து, வருமானம் இன்றி தவிக்கும் தனி நபர்களுக்கு, அவசியம் ஏதாவது ஒரு வகையில் நிவாரணம் அளிக்க வேண்டும். தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன், நகைக்கடன் போன்ற ‘மார்ட்கேஜ் கடன்’ பெற்றுள்ள தனி நபர்களுக்கு, வட்டிக்கு வட்டி என்பதில் இருந்து சலுகை அளிப்பது, வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்க செய்யும்; பரஸ்பரம் அன்பு மலரும்.அப்படி வட்டிக்கு வட்டியை குறைப்பதாலோ, நீக்குவதாலோ ஏற்படும் நிதிச்சுமையை, வங்கிகளே முழுவதும் ஏற்காமல், அதன் ஒரு பகுதியை, ரிசர்வ் வங்கியும், ஒரு பகுதியை, மத்திய அரசும் ஏற்றுக்கொள்ள முடியும். அப்படி நேரும் நிதி இழப்பை சரிக்கட்ட, ஒரு அரசிடம் மாற்று திட்டங்கள் இருக்கும். ஆனால், வங்கிகளிடம் இருக்காது. மேலும், வங்கிகளில் தனியாரும் பங்குகளை வைத்துள்ளனர். வங்கிகள் பாதிக்கப்பட்டால், டிபாசிட்டாளர்கள் மீதே கை வைக்க வாய்ப்புள்ளது; டிபாசிட்டாளர்களிடையே பதற்றம் ஏற்படும். வங்கிகளின் கடமை?தொற்று காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் என்ன செய்ய இயலும் என்றால், ஒரு கடனாளர், கடன் தவணை செலுத்த முடியாமல் தள்ளிப்போகும் நிலை வந்தால், அதை விதிப்படி அணுகுகிறோம் என்று சொல்லி, ‘என்.பி.ஏ.’ (வாராக்கடன்) என்று அறிவிக்காமல் இருந்தாலே பெரிய உதவி தான். தற்போது, ரிசர்வ் வங்கி முதல் இரு காலாண்டுகளுக்கு சலுகை அறிவித்திருப்பதும், ‘கிரெடிட் ரேட்டிங்’கிலும் மாற்றம் வராது என்பதும், தொழில் அமைப்புக்களை ஒரு நிம்மதி பெருமூச்சு விட வைக்கும்.கடன் தவணை செலுத்தாத காரணத்துக்காக, ஒரு நிறுவனம் ‘என்.பி.ஏ.,’ என்று அறிவிக்கப்பட்டால், அந்த நிறுவனம் மேலும் பாதிக்கும். வேறெந்த வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் தர முன்வரமாட்டார்கள். ஏற்கனவே, 13 லட்சம் கோடி வாராக்கடன் இருப்பதாக, புள்ளி விவரம் சொல்கிறது. தற்போது, தொழில்துறை மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வாராக்கடன் இந்த நிதியாண்டு இறுதிக்குள் மேலும் அதிகரிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.


சேவை கட்டணம் குறைக்கலாம்
வட்டி மேல் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாத பட்சத்தில், மற்ற சேவை கட்டணங்களை குறைக்கலாம். காசோலை திரும்பியதற்காக வசூலிக்கப்படும் அபராத கட்டணம் உட்பட, பல சேவை கட்டணங்களை, வங்கிகள், கோவிட் காலத்தில் வசூலிக்காமல், வாடிக்கையாளர்களுக்கு சலுகையாக வழங்கலாம். இதுகுறித்து, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கலாம்.இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ‘வட்டிக்கு வட்டி’ போடுவது தான் நிவாரணமா? அல்லது அது வணிக இலக்கணமா? என்பது தான், தற்போதைய விவாதம். வங்கிகளுக்கும், அதன் டிபாசிட்டாளர்களுக்கும் பாதிப்பு இல்லாமலும், அதேசமயம், தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுதொழில் நிறுவனங்கள், தனி நபர்கள் சிரமம் களையும் வகையிலும், நடவடிக்கை அமைய வேண்டும்.

ரிசர்வ் வங்கி சொல்வதென்ன?
‘கடன் வழங்குவதில், வங்கிகள் அதிக தயக்கம் காட்டினால், அது வங்கிகளின் வருமானத்தை பெரிதும் பாதிக்கும். ஆகவே, கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுவது நல்லதல்ல. கோவிட் பரவலால், வங்கிகளின் வரவு – செலவுகளில் கடும் பாதிப்பு ஏற்படும். இதனால், மூலதன பற்றாக்குறை உருவாகும். வாடிக்கையாளர்களுக்கு கடன் தவணை செலுத்துவதில் வழங்கப்பட்டிருக்கும் அவகாசம் என்பது, ஒரு தற்காலிக தீர்வே. கடன் பெற்றவர்களுக்கு, கடன் மறுசீரமைப்பு தான் நீடித்த நிவாரணமாக அமையும்’ என்று, சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
–தொழில் சுகம் தொடரும்.

ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்

வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத இமெயில் : karthi@gkmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)