ஊழியர்களுக்கு சகாய விலையில் பாரத் பெட்ரோலிய பங்குகள் ஊழியர்களுக்கு சகாய விலையில் பாரத் பெட்ரோலிய பங்குகள் ... டிஜிட்டல் கோல்டு’  முதலீடு  செய்வது எப்படி? டிஜிட்டல் கோல்டு’ முதலீடு செய்வது எப்படி? ...
அமெரிக்க டாலர் ஆதிக்கம் நீடிக்குமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2020
02:02

வானிலை கணிப்­பு­க­ளைப் போலத் தான், சர்­வ­தேச சந்­தை­யில், பெட்­ரோல் – டீசல் விலை, தங்­கம் விலை மற்­றும் பங்­குச் சந்தை ஏற்ற, இறக்­கம் போன்­ற­வற்றை கணிப்­ப­தும். அதன் போக்கை, துல்­லி­ய­மாக கணிக்க முடி­யாது. ஒன்­றின் விலை ஏறும்­போது, மற்­றொன்­றின் விலை இறங்­கு­வது வாடிக்கை.

உல­கில் பெரும்­பான்மை­ யான பொருள் வாங்­கு­வ­தற்­கும், விற்­ப­தற்­கும் அமெ­ரிக்க டாலர் மதிப்­பி­லேயே விலை நிர்­ண­யிக்­கப்­பட்டு, டாலரை பயன்­ப­டுத்­தியே வர்த்­த­கம் நடை­பெ­று­கிறது. ஒரு நாடு, அதி­கப்­ப­டி­யாக கரன்சி அச்­ச­டித்து புழக்­கத்­தில் விடும்­போது, அந்த நாட்­டில், பண­வீக்­கம் அதி­க­ரிக்­கும். அப்­போது டால­ருக்கு நிக­ரான கரன்­சி­யின் மதிப்பு சரி­யும்.
இது­தான், இந்­தியா உட்­பட மற்ற உலக நாடு­களில் நடை­பெ­றும் அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான
பொரு­ளா­தார மேஜிக்.


அமெ­ரிக்­கா­வில் அப்­படி அல்ல. தேவைக்கு ஏற்ப, கரன்சி அச்­ச­டித்து புழக்­கத்­தில் விட்­டா­லும், அங்கு பெரிய அள­வில் பண­வீக்­கம் ஏற்­ப­டு­வது­இல்லை; அதன் டாலர் மதிப்­பும் சரிந்­த­தில்லை.
கூடு­தல் கரன்சி அச்­ச­டித்து விடு­வ­தால் ஏற்­படும் பண­வீக்­கத்தை, மற்ற நாடு­கள் மீது அமெரிக்கா சுமத்­து­கிறது எனக் கூறப்படு­வ­துண்டு.3 டிரில்­லி­யன் டாலர் தன் குடி­மக்­க­ளுக்கு, ‘கோவிட் – 19’ நிவா­ர­ணம் வழங்­கு­வ­தற்­காக, அமெ­ரிக்கா, இந்­திய மதிப்­பில், 225 லட்­சம் கோடி ரூபாய் கொடுத்­துள்­ளது.


இந்த சூழ்­நி­லை­யி­லும், அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு, இந்­திய ரூபாய்க்கு நிக­ராக, 76 ரூபாய் என்று அதி­க­ரித்­தது. இதை, உலக நாடு­கள் உன்­னிப்­பாக கவனித்­தன. ஏனெ­னில் அவை,
இறக்­கு­ம­தியை அமெரிக்க டால­ரில் தான் செய்ய வேண்டி இருக்­கிறது. அதற்­கேற்ப அன்­னிய செலா­வ­ணியை கையிருப்­பில் வைத்­தி­ருக்க வேண்­டுமே என்ற கவலை. இந்த பர­ப­ரப்­பான எதிர்­பார்ப்­பில், அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு, இந்திய ரூபா­யில், சரே­லென, 72 ரூபாய்க்கு குறைந்­தி­ருக்­கிறது. இது மேலும் குறை­யவே வாய்ப்பு இருக்­கிறது என்­கிற கணிப்­பும் உலா வரு­கிறது.

டால­ரும், தங்­க­மும்


பொது­வாக, டாலர் மதிப்பு உய­ரும்­போது, தங்­கத்­தின் மதிப்பு குறை­யும். டாலர் மதிப்பு சரி­யும்­போது, தங்­கத்­தின் மதிப்பு அதி­க­ரிக்­கும்.ஆனால் கொரோனா காலத்­தில், டாலர் மதிப்­பும், தங்­கம் விலை­யும் ஒரே அளவு அதி­க­ரித்­தது. அதற்கு ஒரு பின்­னணி உண்டு. தற்­போது, பெரிய அளவில், தங்க உற்­பத்­தி­யா­ள­ராக, அமெ­ரிக்கா இல்லாத போதி­லும், உல­கத்­தில் உள்ள தங்­கத்­தின் ஒரு பகு­தியை இருப்பு வைத்­தி­ருக்­கிறது. இத­னால், சர்­வ­தேச தங்­கம் விலையை தீர்­மா­னிக்­கும் சக்­தி­யா­க­வும் அமெ­ரிக்கா உள்­ளது.


அமெ­ரிக்க டாலர், உலகை வளைத்­தது எப்படி?


அமெ­ரிக்க விடு­த­லைப் போராட்­டத்­துக்­காக, 1775ல், ‘புரட்சி போர்’ நடந்­த­போது, ‘கான்­டி­னன்­டல் காங்­கி­ரஸ்’ அமைப்பு, ‘கான்­டி­னன்­டல் கரன்சி’யை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அதன் பிறகு
ஏற்­பட்ட பல மாற்­றங்­க­ளுக்­குப் பிறகு, ஜூலை, 6, 1785ல், ‘யு.எஸ்., டாலர்’ ஆக பெயர் மாற்­றம் பெற்று, புழக்­கத்­துக்கு வந்­தது.இரண்­டாம் உல­கப் போர், ஆசியா மற்­றும் ஐரோப்­பிய நாடு­களின் பொரு­ளா­தா­ரத்தை பெரிதும் பாதித்­தது; ஆனால் அமெ­ரிக்கா தப்­பி­யது.

ஐரோப்­பிய நாடு­கள் தங்­கள் வச­மி­ருந்த தங்­கத்தை அமெ­ரிக்­கா­வி­டம் வழங்கி, போருக்­கான
ஆயு­தங்­களை வாங்­கின. இதன் கார­ண­மாக, அமெரிக்­கா­வி­டம் தங்­கம் குவிந்­தது. இங்­கி­லாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்­றும் அமெ­ரிக்கா இணைந்து, 1944ல், அமெ­ரிக்­கா­வில் நடத்­திய,
‘ப்ரெட்­டன் வூட்ஸ்’ மாநாட்­டில் ஒரு ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது.அதன்­படி, அமெ­ரிக்க டாலரை அடிப்­ப­டை­யாக கொண்டு, 28.3 கிராம் கொண்ட 1 அவுன்ஸ் தங்­கத்­தின் விலை, 35 டாலர் என மதிப்­பி­டப்­பட்­டது.


மற்ற நாடு­கள், அமெ­ரிக்க டாலரை அடிப்­படை­ யாக கொண்டு, தங்­கள் நாட்டு கரன்­சி­யின் மதிப்பை முடிவு செய்­தன. ஐ.எம்.எப்., உரு­வா­கக் கார­ண­மாக இருந்­த­தும், இந்த மாநாடு தான். அதன் பிறகு, தங்­கள் கையி­ருப்­பில் உள்ள அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு மீது, உலக நாடு­கள் கவ­னம் செலுத்த துவங்­கின; அது­வரை, தங்­கமே முதன்­மை­யாக இருந்­தது.அதன்­பி­றகு, உலக நாடு­கள், தங்­க­ளி­டம் இருந்த தங்­கத்தை அமெ­ரிக்­கா­வி­டம் கொடுத்து, டாலரை பெற்­றுக் கொண்­டி­ருந்­தன.


கடந்த, 1971ல், அமெ­ரிக்க அதி­பர் ரிச்­சர்ட் நிக்­சன், தங்­கத்­துக்கு நிக­ராக, ‘டாலர் எக்ஸ்­சேஞ்ச்’ தரும் முறைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தார். தற்­போது புழக்கத்தில் இருக்­கும், ‘விர்ச்­சு­வல்’ கரன்­சி­யான, ‘கிரிப்டோ’வை, உலக நாடு­கள் ஏற்­றுக் கொண்­டால், அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு சரி­யும்.

புது நோட்­டால் பிரச்னை

கடந்த, 2008ம் ஆண்­டுக்­குப் பிறகு, டாலர் மதிப்பை அதி­க­ரிக்க, அமெ­ரிக்கா எடுத்த நட­வ­டிக்­கை­க­ளால், தங்­கம் விலை­யில் பெரிய மாற்­றம் இல்லை. ஆனால், தற்­போது நிலைமை மாறி விட்­டது. அமெ­ரிக்க அதி­பர், கரன்­சி­களை அச்­ச­டித்து குவிக்­கும் நட­வ­டிக்­கை­கள், அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா ­தா­ரத்தை பாதிக்­க­லாம் என்ற கருத்து நில­வு­கிறது.


கோவிட் – 19 நிவாரணத்­திற்­காக, 3 டிரில்­லி­யன் டாலர் வினி­யோ­கித்த அமெ­ரிக்க அர­சாங்­கம், வர­வுள்ள அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லுக்­காக, மேலும் 1 டிரில்­லி­யன் டாலர் மதிப்­பில் வினி­யோ­கிக்­க­வும் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கிறது. அது விரை­வில், டாலர் மதிப்பை குறைத்து பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். தங்­கத்­தின் மதிப்புஅதி­க­ரிக்­கும் என்­றும் எதிர்பார்க்­கப்­ப­டு­கிறது.

அன்­னிய செலா­வணி


தற்­போது அமெ­ரிக்க டாலர் விலை ஏற்ற, இறக்­கங்­களை பொருத்தே இந்­திய பொரு­ளா­தா­ரத்­தில் முக்­கிய திருப்­பங்­கள் நிகழ இருக்­கின்றன. நாட்­டின், ஏற்­று­மதி – இறக்­கு­ம­திக்கு அன்­னிய செலா­வ­ணியே அடிப்­படை. ஏற்­று­மதி மூலம் பெறப்­படும் வரு­வாய், அன்­னிய நேரடி முத­லீடு, வெளி­நாட்டு போர்ட்­ போ­லியோ முத­லீடு, வெளி­நாட்டு வாழ் இந்­தி­யர் இந்­தி­யா­வுக்கு அனுப்பி வைக்­கும் பணம் போன்­ற­வற்­றின் வாயி­லா­கவே, நாட்­டின் அன்­னிய செலா­வணி நில­வ­ரம் கணிக்­கப்­ப­டு­கிறது.அதே­போல, கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி, புதிய திட்­டங்­க­ளுக்­கான இயந்­தி­ரங்­கள் வாங்­கு­வது, திரும்பப் பெறப்­படும் வெளி­நாட்டு போர்ட்­போ­லியோ முத­லீடு போன்­ற­வற்­றுக்­காக செல­வி­டும் டாலர்­களும் அன்­னிய செலா­வ­ணியை பாதிக்­கும்.


இந்த இரண்­டிற்­கும் இடையே உள்ள இடை­வெளி தான், நாட்­டின் அந்­நிய செலா­வணி கையிருப்­பைக் குறிக்­கிறது. கடந்த, 1991ம் ஆண்டு கிட்­டத்­தட்ட மைன­சில் இருந்த நாட்­டின் அன்னிய செலா­வணி கையி­ருப்பு, தற்­போது, 540 மில்­லி­யன் டாலர் அள­வில் உள்­ளது.
இதுவே சீனா­வின் தற்­போ­தைய கையி­ருப்பு, 3 டிரில்­லி­யன் டாலர் ஆக உள்­ளது.
சீனா­வில் குவித்­தி­ருக்­கும் முத­லீ­டு­க­ளையே, இந்­தி­யா­விற்கு மாற்­று­வ­தற்கு உலக நாடு­கள் நினைக்­கும் வேளை­யில், வெளி­நாட்டு போர்ட்­போ­லியோ முத­லீ­டு­கள் நம்மை விட்­டுச் செல்­வ­தற்கு வாய்ப்­பில்லை என்றே தோன்­று­கிறது.


கை ­கொ­டுக்­க­ணும்


உலக சந்­தை­யில் அமெ­ரிக்க டால­ரின் மதிப்­பிற்கு எதி­ராக, இந்­திய ரூபா­யின் மதிப்பு உய­ரும்­போது, அது நிச்­ச­யம் நம் நாட்டிற்கு கம்­பீ­ரத்தை அளிக்­கும். கொரோனா கார­ண­மாக, சீனா­வின் மீதான உலக நாடு­களின் வெறுப்­பால், தற்­போ­தைக்கு இந்­தி­யா­விற்கு, பல துறை உற்­பத்தி பொருள்­கள் சேவை­களின் ஏற்­று­ம­திக்­கான வாய்ப்­பு­களே பிர­கா­ச­மாக காணப்­ப­டு­கின்றன.
கச்சா எண்­ணெய், மருந்து பொருட்­கள் உட்­பட அத்­தி­யா­வ­சிய பொருள் தவிர, இறக்­கு­ம­திக்­கான அவ­சி­யம் தற்­போது எழ­வில்லை. இத­னால், டாலர் விலை குறை­வது, பெரிய பலனை அளிக்­காது.

மேலும், பிர­த­மர் நரேந்­திர மோடி­யின், தற்­சார்பு பொரு­ளா­தார ஆர்­வ­மும், ஆக்­க­மும் நாட்­டில் வேக­மெ­டுத்­தி­ருப்­ப­தால், அவ­சி­ய­மற்ற பொருட்­களின் இறக்­கு­மதி இனி தவிர்க்­கப்­படும்.
அன்­னிய செலா­வணி பயன்­ப­டுத்­து­வது கட்­டுக்­குள் வரும். ஆகவே, அமெ­ரிக்­கா­வின் டாலர் அச்­ச­டிப்பு என்ற புதிய ஆட்­டத்­தால், இந்­தி­யா­வில் டாலர் விலை சரி­யா­மல் காப்­பாற்றி,
இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­களின் வர்த்­த­கம் பாதிக்­காத வகை­யில் தாங்கிப் பிடிக்க வேண்­டிய
கட்­டா­யம், ரிசர்வ் வங்­கிக்­கும், மத்­திய அர­சுக்­கும் ஏற்பட்டுள்­ளது.டாலர் என்ன மாயம் செய்­தா­லும், அதன் லகான் மோடி அர­சின் கைகளில் இருப்­பதே, நமக்­கான நம்பிக்கை.


தங்­கம் இறக்­கு­மதி சரிவு

ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, இந்­தி­யா­வில் தங்­கம் இறக்­கு­மதி பெரிய சரிவை சந்­தித்­துள்­ளது. தற்­போது இந்­தியா, 633.1 டன் தங்­கத்தை கையி­ருப்­பில் வைத்­தி­ருக்­கிறது.அதே­போல, கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தி­யும் குறைந்­துள்­ளது. இத­னால், அன்­னிய செலா­வணியில் திருப்­தி­க­ர­மான கையி­ருப்பு உள்­ளது. ஆகஸ்ட் மூன்­றா­வது வாரத்­தில், நாட்­டின் அன்­னிய செலா­வணி கையி­ருப்பு, 40 லட்­சம் கோடி­யாக உள்­ளது. இதை வைத்து, 13 மாதங்­க­ளுக்­கான இறக்­கு­ம­தியை சமா­ளிக்க முடி­யும்.

ஆடிட்­டர்


ஜி.கார்த்­தி­கே­யன்

karthi@gkmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)