ஆட்களை பணியமர்த்தும் எண்ணம் சிறிய நிறுவனங்களில் அதிகரிப்பு ஆட்களை பணியமர்த்தும் எண்ணம் சிறிய நிறுவனங்களில் அதிகரிப்பு ...  மத்திய அரசு அவகாசம் மத்திய அரசு அவகாசம் ...
ரிலையன்ஸ் சில்லரை வணிகத்தில் 'சில்வர் லேக் பார்ட்னர்ஸ்'. முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2020
21:15

புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ்' நிறுவனத்தில், 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது, அமெரிக்காவை சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, 'சில்வர் லேக் பார்ட்னர்ஸ்'.

இதனையடுத்து, ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின், 1.75 சதவீத பங்குகள், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் வசம் வந்துள்ளது.இது குறித்து மேலும் சில தகவல்கள்:
* சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனம், ரிலையன்சில் மேற்கொண்டுள்ள இரண்டாவது பெரிய முதலீடு இதுவாகும். இதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 10 ஆயிரத்து, 203 கோடி ரூபாயை, இந்த ஆண்டின் துவக்கத்தில் முதலீடு செய்திருந்தது.

* ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்துக்கு, நாடெங்கிலும் மொத்தம், 12 ஆயிரம் ஸ்டோர்கள் உள்ளன. இக்கடைகளுக்கு வந்து சென்றவர்கள் எண்ணிக்கை, 64 கோடி பேர்.
* சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனம், உலகளவில் தொழிநுட்ப நிறுவனங்களில் மிகப்பெரும் அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும்.

* ஏர்பிஎன்பி, அலிபாபா, டெல் டெக்னாலஜிஸ், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது, சில்வர் லேக் பார்ட்னர்ஸ்.

* ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்து, ரீடெய்ல் வணிகத்தில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
* கடந்த மாதம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை விற்பனை மற்றும் போக்குவரத்து வணிகத்தை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது, ரிலையன்ஸ்
* சில்வர் லேக் நிறுவனத்தின் முதலீட்டை அடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள், நேற்று, மும்பை பங்குச் சந்தையில், 2.57 சதவீதம் அதிகரித்து, 2,161.25 ரூபாயாக உயர்ந்தது
* இதற்கிடையே, உலகளாவிய லாப நோக்கமற்ற கல்வி அமைப்பான, வேர்ல்டு ரீடர், 15 கோடி ஜியோ போன் பயனர்கள், குழந்தைகள் புத்தகங்களை அணுகக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்த, ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)