பதிவு செய்த நாள்
16 செப்2020
21:37

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க, மூன்று கமிட்டிகளை இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் அமைத்து, அவற்றிடமிருந்து அறிக்கைகளை பெற இருக்கிறது.இது குறித்து கவுன்சில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க விரிவான ஆலோசனைகளை பெறும் வகையில், மூன்று கமிட்டிகள் அமைக்கப்படுகிறது.உணவு, பானங்கள், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம், ரசாயனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறித்த கருத்துக்களை அறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தெரிவிப்பு
இந்த குழுக்கள், இப்பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்கும்.‘ராம்தேவ் புட்ஸ் புராடக்ட்ஸ்’ நிறுவனத்தின் பன்னாட்டு வணிக பிரிவின் தலைவர் லக்ஷ்மன் சிங் ரத்தோர், உணவு மற்றும் பானங்கள் துறைக்கான கமிட்டி யின் தலைவராக இருப்பார்.உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத் துறைக்கான கமிட்டியின் தலைவராக, ‘ஐடிசி’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆர்.செங்குட்டுவன் இருப்பார்.
இதேபோல், ‘தான்யா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனீஷ் ஷா, ரசாயனத் துறை கமிட்டியின் தலைவராக இருப்பார்.இந்த குழுக்கள் தொடர்ச்சியாக கூடி, தொழில் துறையின் தேவை மற்றும் கவலைகளை அறிந்து அரசுக்கு தெரிவிக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.காரணம்கடந்த ஆகஸ்டில், நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து ஆறாவது மாதமாக சரிவைக் கண்டதை அடுத்து, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டில், ஏற்றுமதி, 12.66 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.மேலும், நாட்டின் இறக்குமதியும் கடந்த ஆகஸ்டில், 26 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 36 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நாட்டின் ஏற்றுமதி குறைந்ததற்கு பெட்ரோலியம் பொருட்கள்,தோல், பொறியியல் பொருட்கள், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆகிய துறைகளில் சரிவு ஏற்பட்டது காரணமாக அமைந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|