பதிவு செய்த நாள்
16 செப்2020
21:42

மும்பை:அன்னிய முதலீடுகள் வரத்து தொடர்ந்து நீடித்து வரும் காரணத்தால், நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், நேற்று வர்த்தக இறுதியில், 258 புள்ளிகள் அதிகரித்து, 39302.85 புள்ளிகளில் நிலைபெற்றது. இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின், நிப்டியும், 82.75 புள்ளிகள் அதிகரித்து, 11604.55 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், மகிந்திரா அண்டு மகிந்திரா பங்குகள் விலை, 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.
இதனையடுத்து, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, எச்.டி.எப்.சி., பேங்க், இன்போசிஸ், எல் அண்டு டி., அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்தது.மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் பேங்க், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., ஆகிய நிறுவன பங்குகளின் விலை சரிவைக் கண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|