பதிவு செய்த நாள்
16 செப்2020
21:43

புதுடில்லி,:ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகள் விலை, நேற்றைய வர்த்தகத்தில், 6 சதவீதம் வரை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்புக்கு காரணம், இந்நிறுவனம், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து, ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் அமைக்கும் பணியில் ஈடுபட இருப்பதாக வெளிவந்த செய்தி தான்.
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம், கடந்த செவ்வாயன்று, 10 தொலைத் தொடர்பு மண்டலங்களில், நவீன கண்ணாடி இழை அமைப்பை ஏற்படுத்துவதற்காக, பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தது.இந்த நவீன கண்ணாடி இழை அமைப்பின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அலைவரிசையின் உதவியுடன் சிறப்பான சேவையை வழங்க முடியும்.
இந்த ஒப்பந்த அறிவிப்பை அடுத்து, நேற்று ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகள் விலை, தேசிய பங்குச் சந்தையில், வர்த்தக இறுதியில், 3.62 சதவீதம் அதிகரித்து, 162.95 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|