பதிவு செய்த நாள்
16 செப்2020
21:56

மும்பை:நாட்டின் மொத்த வரி வசூல், இரண்டாவது காலாண்டில், செப்டம்பர், 15 வரையிலான காலத்தில், 22.5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து, வருமான வரித்துறை விபரங்கள் நன்கு அறிந்த அதிகாரி கூறியதாவது: இரண்டாவது காலாண்டில், செப்டம்பர், 15ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் மொத்த வரி வசூல், 22.5 சதவீதம் அளவுக்கு சரிந்து, 2.54 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில், வரி வசூல், 3.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
இருப்பினும், துல்லியமான தகவல் இந்த மாத முடிவில் தான் வெளிவரும். ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், மொத்த வரி வசூல், 31 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, முன்கூட்டியே செலுத்தப்படும் அட்வான்ஸ் டேக்ஸ், 76 சதவீதம் அளவுக்கு குறைந்து போனது தான் இந்த சரிவுக்கு முக்கிய காரணம்.இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|