பதிவு செய்த நாள்
16 செப்2020
21:57

புதுடில்லி:‘கேம்ஸ்’ எனும், கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம், 21ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கின் விலையை அறிவித்துள்ளது.
ஒரு பங்கின் விலை, 1,229 – 1,230 ரூபாய் என நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீடு, 21ம் தேதியன்று துவங்கி, 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 2,240 – 2,242 கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும், கேம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், என்.எஸ்.இ., இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் வசம் இருக்கும், 37.4 சதவீத பங்குகள் அதாவது, 1.83 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.என்.எஸ்.இ., இன்வெஸ்ட்மென்ட்ஸ், தேசிய பங்குச் சந்தையின் துணை நிறுவனமாகும். கேம்ஸ் நிறுவனம், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப அடிப்படையிலான உள் கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கி வரும் நிறுவனமாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|