பதிவு செய்த நாள்
18 செப்2020
21:10

புதுடில்லி:கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனம், வரும், 21ம் தேதி, பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்கின் விலையை, 338 – 340 ரூபாய் என நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளது.
318 கோடி ரூபாய்
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, 21ம் தேதி துவங்கி, 23ம் தேதியன்று முடிவடைகிறது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 165 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; நிறுவனர்களின் வசம் இருக்கும், 45 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.இந்த பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக, துணிகர முதலீட்டு நிறுவனங்களுக்கான வெளியீடு நேற்று துவங்கியது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், அதிகபட்ச விலையில் பங்குகள் விற்பனையாகும் நிலையில், 318 கோடி ரூபாய் திரட்டப்படும்.
மூலதனம்
திரட்டப்படும் நிதியை, தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கும், நடைமுறை மூலதனத்துக்கும், பொதுவான நிறுவன தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|