பதிவு செய்த நாள்
18 செப்2020
21:12

புதுடில்லி:தரகு நிறுவனமான, ஏஞ்சல் புரோக்கிங், 22ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.உள்நாட்டு நிறுவனமான, ஏஞ்சல் புரோக்கிங், 22ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாகவும், பங்கின் விலை, 305 – 306 ரூபாய் என நிர்ணயித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
வரும், 22ம் தேதியன்று துவங்கும் இந்த பங்கு வெளியீடு, 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் விற்பனை செய்யப் பட இருக்கின்றன.
இதன் மூலம் திரட்டப்படும், 600 கோடி ரூபாய் நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொதுவான நிறுவன நோக்கங்களுக்காகவும் செலவிடப்பட உள்ளது.இந்நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள, 1,800 நகரங்களில் துணை தரகர்கள் மற்றும் 110 கிளைகள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|