ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தில் கே.கே.ஆர்., ரூ.5,550 கோடி முதலீடு ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தில் கே.கே.ஆர்., ரூ.5,550 கோடி முதலீடு ... ‘மறு விற்பனை மதிப்பு இல்லாதது மின் வாகனத்துக்கான சவாலாகும்’ ‘மறு விற்பனை மதிப்பு இல்லாதது மின் வாகனத்துக்கான சவாலாகும்’ ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்டில் குறையும் தனியார் பங்கு முதலீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2020
22:08

புது­டில்லி: கடந்த ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை­யி­லான காலத்­தில், ரியல் எஸ்­டேட் துறை­யில், தனி­யார் பங்கு முத­லீடு, 85 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை சந்­தித்­துள்­ளது என, ஆய்­வ­றிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.

கன­டாவை சேர்ந்த, ரியல் எஸ்­டேட் சேவை நிறு­வ­ன­மான,‘கோலி­யர்ஸ் இண்­டர்­நே­ஷ­னல்’ மற்­றும் இந்­திய வர்த்­தக சபை­க­ளின் கூட்­ட­மைப்­பான,‘பிக்கி’யும் இணைந்து ஓர் ஆய்­வ­றிக்­கையைவெளி­யிட்­டுள்­ளது.அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது.கடந்த ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை­யி­லான காலத்­தில், இந்­திய ரியல் எஸ்­டேட் துறை­யில், தனி­யார் பங்கு முத­லீடு கிட்­டத்­தட்ட, 6,500 கோடி ரூபாய் வந்­துள்­ளது.


இதுவே, இதற்கு முந்­தைய ஆண்­டின் இதே காலத்­தில், 42 ஆயி­ரத்து, 880 கோடி ரூபா­யாக இருந்­தது. இது, 85 சத­வீத சரி­வா­கும்.நடப்பு ஆண்­டில் வந்த முத­லீ­டு­களில், 24 சத­வீ­தம் அதா­வது, 1,500 கோடி ரூபாய் அள­வுக்கு, அலு­வ­லக பிரி­வில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.தொழிற்­சாலை மற்­றும் கிடங்­கு­கள் பிரி­வில், 12 சத­வீ­த­மும்; டேட்டா சென்­டர்­கள் பிரி­வில், 46 சத­வீ­த­மும் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளன.

விருந்­தோம்­பல் பிரி­வில், 9 சத­வீ­த­மும்; வீடு­கள் பிரி­வில், 8 சத­வீ­த­மும்; கூட்டு வாழ்க்கை பிரி­வில் ஒரு சத­வீ­த­மும் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.உள்­நாட்டு மற்­றும் வெளி­நாட்டு
முத­லீட்­டா­ளர்­கள், தற்­போ­தைய தொற்­று­நோய் சூழ­லின் பின்­ன­ணி­யில், எச்­ச­ரிக்­கை­யான முத­லீட்டு அணு­கு­மு­றையைமேற்­கொள்­கின்­ற­னர். இவ்­வாறு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோலி­யர்ஸ் நிறு­வ­னத்­தின் சில ஆலோ­ச­னை­கள்:கிள­வுடு கம்ப்­யூட்­டிங் பிரி­வில் வளர்ந்து வரும் தேவையை மேம்­ப­டுத்த, தரவு மையங்­களில் கவ­னம் செலுத்­த­லாம். மேலும், தொடர்ந்து அலு­வ­லக பிரி­வு­க­ளி­லும் அதிக கவ­னம் செலுத்­த­லாம். இப்­பி­ரி­வில் நிலை­யான வாடகை வரு­மா­னத்­துக்­கான வாய்ப்பு இருக்­கிறது.

*மின்­னணு வர்த்­த­கம் மற்­றும் இதர நுகர்­வோர் சார்ந்த துறை­யில் இருக்­கும் தேவை­யின்
பின்­ன­ணி­யில், முத­லீட்­டா­ளர்­கள், தொழில்­துறை மற்­றும் கிடங்­கு­கள் பிரி­வில் கவ­னம் செலுத்­த­லாம்.*பூர்த்தி செய்­யப்­பட்ட மலிவு மற்­றும் நடுத்­தர பிரிவு குடி­யி­ருப்பு திட்­டங்­களில் பங்கு முத­லீட்டை மேற்­கொள்­ள­லாம். முத­லீட்­டா­ளர்­கள் பெரிய கட்­டு­மான
நிறு­வ­னங்­க­ளு­டன் கூட்டு சேர்­வதை கருத்­தில் கொள்ள வேண்­டும். மேலும், பசுமை குடி­யி­ருப்பு திட்­டங்­க­ளி­லும் கவ­னம் கொள்­ள­லாம்.

*விருந்­தோம்­பல் மற்­றும் சில்­லரை ரியல் எஸ்­டேட் பிரி­வு­களில் கவர்ச்­சி­க­ர­மான
மதிப்­பீ­டு­களை பரி­சீ­லிக்­க­லாம். தேவை­களில் மீட்சி ஏற்­பட்டு வரு­வ­தால், இதை பயன்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிக்­க­லாம்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)