இனிப்புகளை விற்க உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டுப்பாடு இனிப்புகளை விற்க உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டுப்பாடு ...  சொந்த வீடு வாங்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் சொந்த வீடு வாங்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் ...
கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் ‘ஸ்டார்ட் அப்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
11:13

கொடிய நோய்களில் ஒன்று கேன்சர். யாருக்கு வரும், எப்போது வரும், உடலில் எந்த இடத்தில் வரும் என்று வரையறுத்து சொல்ல முடியாத, ஒரு கொடிய நோயாக இருந்து வருகிறது.


தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கேன்சர் வந்தவுடன், அவர் பட்ட கஷ்டங்களை பார்த்து தாங்க முடியாமல் அதுபோல், கேன்சர் வந்தவர்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட, ‘ஸ்டார்ட் அப்’தான் இது. இதை துவங்கியவர், ராஷி ஜெயின்.இவர், இந்த நிறுவனத்தை துவக்கும் முன், ‘பயோகான்’ நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நல்ல வேலையை உதறிவிட்டு, மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்டார்ட் அப்’ இது. இன்று, உலக அளவில், 1,500 கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்களையும், 500 கேன்சர் மருத்துவமனைகளையும் மற்றும் நோயாளிகளையும் இணைக்கும் ஒரு பாலமாக இருக்கிறது.



ஒரு கேன்சர் நோயாளிக்கு தேவை அன்பு, ஆறுதல், சரியான மருத்துவ சிகிச்சை.அவ்வகையில், நோயின் தீவிரத்தையும், அதற்கான தீர்வையும் எடுத்து கூறும் விதமாக இந்த இணையதளம் இருக்கிறது. உலகமே கொரோனா பயத்தில் இருப்பதால், நோயாளிகள் ‘டெலி கன்சல்டேஷன்’ செய்யும் வசதியும் இருக்கிறது. இதுவரை ஒரு லட்சம் நோயாளிகளுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இணையதள முகவரி www.onco.comஇது போன்றதொரு சேவையை, ‘கோர் டயக்னாஜிஸ்டிக்ஸ்’ என்ற ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனியும் வழங்குகிறது. இது, 3,000ம் மருத்துவர்களுடனும், 200 மருத்துவமனைகளுடனும் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது.


குறிப்பாக, குடும்ப வழியாக வரும் கேன்சர் நோயாளிகளுக்கு அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இணையதளம் https://corediagnostics.in/சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com, மொபைல் போன் எண்: 98204 – 51259


‘காஸ்மெட்டிக்ஸ்’இனிப்பாக இருக்குமா?
‘காஸ்மெட்டிக்ஸ்’ துறையில், பிரபல நிறுவனங்களுடன் போட்டி போடுவது என்பது எளிதல்ல. ஆனால், ஒரு ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனி, அவர்களுடன் போட்டி போட்டு, ஐந்து ஆண்டில், ‘இன்ஸ்டாகிராமில்’ ஏறத்தாழ, 6 லட்சம் பேரை பின் தொடர வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள பல பெரிய ஸ்டோர்களிலும் இவர்களது பொருட்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அழகு சாதன பொருட்களில் நூற்றுக்கணக்கான வகைகளை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இணையதளம்: https://in.sugarcosmetics.com/

– சேதுராமன் சாத்தப்பன் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)