கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் ‘ஸ்டார்ட் அப்’கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் ‘ஸ்டார்ட் அப்’ ...  சொந்த வீடு வாங்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் சொந்த வீடு வாங்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சுணங்கினால் சுமை தான்; கட்டத் துவங்குங்கள் இ.எம்.ஐ.,யை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
20:25

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில்லரைக் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தியாவின் பெரிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கியும், எச்.டி.எப்.சி., வங்கியும், கடந்த வாரம் தத்தமது திட்டங்களையும்வழிமுறைகளையும் அறிவித்தன.


அதாவது, வீட்டு வசதி மற்றும் பிற தொடர்புடைய கடன்கள், கல்வி கடன், வாகன கடன்கள் – வணிக பயன்பாட்டிற்கான கடன்கள் தவிர – மற்றும் தனிப்பட்ட கடன்கள் உள்ளிட்டவை, சில்லரை கடன் மறுசீரமைப்புக்கு தகுதியானவை. கடந்த வார இறுதி வரை, எஸ்.பி.ஐ., வலைதளத்தில் கடன் சீரமைப்பை, 3,500 பேர் மட்டுமே கோரியுள்ளனர்; அவர்களில், 111 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்என்ற விபரம் வெளியாகி உள்ளது.

பலருக்கு குழப்பம்

இதற்கு, பல காரணங்கள். ஒன்று, இணைய வழியில், இந்த வசதியை அணுகுவது எப்படி என்று, பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.இரண்டாவது, தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் என்பதை நிரூபிப்பதற்குத்தேவையான ஆவணங்களைத் திரட்டுவதில் தாமதம். குறிப்பாக பிப்ரவரி மாதச் சம்பளச் சீட்டையும், அதற்குப் பிறகான சம்பளச் சீட்டுகளையும் வலைதளத்தில் தெரிவிக்க வேண்டும் அல்லது வங்கி ஸ்டேட்மென்டைக் காண்பிக்க வேண்டும்.


முறையாக மாதந்தோறும் சம்பளச் சீட்டு தரும் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எத்தனை பேரோ!மூன்றாவது, எத்தனைகாலத்துக்குள் தம்மால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும், மீண்டும் மாதாந்திர தவணைத் தொகையைச் செலுத்த முடியும் என்பதைக் கணிப்பதில் பலருக்கும் குழப்பம்.நான்காவது, இதுநாள் வரை, வாடிக்கையாளர் ஒழுங்காக, சீராக மாதாந்திரதவணை செலுத்தி வந்திருக்கிறாரா என்று கவனித்து, அவர் கடன் சீரமைப்பு பெற தகுதியானவரா என்பது முடிவு செய்யப்படும் என்று வங்கிகள் கூறியிருப்பது.


பிராசசிங் கட்டணம்

ஏனெனில், கடனைத் திருப்பிச் செலுத்த, அரசு கால அவகாசம் கொடுத்ததை, நிறைய பேர் பயன்படுத்தினரே!இன்னொரு முக்கிய விஷயம், வட்டியும், கடன்சுமையும்.ஸ்டேட் பேங்க் வழங்கியுள்ள திட்டத்தின் படி, வாடிக்கையாளர் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை, இ.எம்.ஐ., செலுத்த வேண்டாம். இதற்கு சந்தோஷம்அடைந்து, சும்மா இருந்து விட்டால், பின்னாளில், எக்கச்சக்கமாய் இ.எம்.ஐ., எகிறி விடும். தற்போதுள்ள வட்டி விகிதத்தோடு, 0.35 சதவீதம் கூட்டப்படும். எச்.டி.எப்.சி., வங்கியோ, 25,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் கடன்களுக்கு மறுசீரமைப்பு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருப்பதோடு, ‘பிராசசிங்’ கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


ஒரு விஷயம் மட்டும் தெளிவில்லாமல் இருக்கிறது. இரண்டாண்டுகள் கடன்களைச் செலுத்த வேண்டாம் என்றால், அந்த அசல் தொகைக்கு வட்டி போட மாட்டார்களா? வங்கி தொழிலே வட்டித் தொழில்தான் என்பதால், குறைந்தபட்சம், 12 சதவீத வட்டியாவது அசல் தொகையின் மீது போடுவரோ என்ற சந்தேகம் எழுகிறது. வாழ்க்கை முழுதும் கடன்காரனாகவே இருந்து விட வாய்ப்புண்டு.


ஏராளமான தடுப்புகள்

டிசம்பர் 24, 2020 வரை, இத்திட்டத்தில் சேருவதற்கு கால அவகாசம்இருப்பதால், கூடுதல் தெளிவு பெற்ற பின், இத்திட்டத்தில் காலடி எடுத்து வைக்கலாம். வங்கிகளும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கின்றன. உண்மையிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, ஏராளமான தடுப்புகளைப் போட்டு வைத்திருக்கின்றன.


இரண்டாண்டுகள் இ.எம்.ஐ.,யைத் தள்ளி வைத்தால், வங்கியை எப்படி இயக்குவது? என்ன செய்யப் போகின்றனர் என்று தெரியவில்லை.மேலும், இந்தச் சலுகை, வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே! வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், ஹோம் பைனான்ஸ் கம்பெனிகளுக்கு பொருந்தாது.ஆர்.பி.ஐ., இத்தகைய உத்தரவைப் போட்டு விடுமோ என்ற அச்சத்தில், இந்த நிறுவனங்கள், இப்போதே கடன் வசூலில் முனைப்பு காட்டுகின்றன.

இந்தக் குழப்பங்களே வேண்டாம்!

கடனைப் பெற்று பிள்ளையைப் படிக்க வைத்தோமா, வீட்டைக் கட்டினோமா, வாகனங்கள் வாங்கினோமா, வாழ்க்கைத் தரத்தை லேசாக உயர்த்திக் கொண்டோமா... நன்றி தெரிவிக்கும் விதமாக, மீண்டும் மாதாந்திர தவணையைக் கட்டத் தொடங்கி விடுவோம். அது நம் பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிம்மதி அளிக்கும்!

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com

9841053881

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)