பதிவு செய்த நாள்
28 செப்2020
21:56

புதுடில்லி:அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா, உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும்; நாட்டின் அடிப்படைகள் அப்படியே இருப்பதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறுகிய காலத்துக்கானது தான் என்றும், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு
ஜே.பி.மார்கன் இந்தியா நிறுவனம் நடத்திய மாநாட்டில் பங்கேற்று, அவர் மேலும் பேசியதாவது: எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அடுத்த 30 ஆண்டுகளில், இந்தியா உலகின் மிகப் பெரிய வணிக வாய்ப்பை பெற்ற நாடாக இருக்கும். நாட்டின் புவிசார் அமைப்பு, பெரியளவிலான சந்தை உள்ளிட்ட பல சாதகமான அம்சங்கள், பிற நாடுகளை விட அதிகமாக இந்தியாவுக்கு இருக்கின்றன.
கடந்த 1990ம் ஆண்டில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, 38 லட்சம் கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது, 30 ஆண்டுகளுக்குப் பின் இது, 90 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட, 170 லட்சம் கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னடைவு
இந்த சமயத்தில் இந்தியா, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும். உலகளாவிய நெருக்கடி காரணமாக, இந்தியா குறுகிய கால பின்னடைவு களை சந்தித்து இருக்கிறது. இதை வைத்து, இந்தியாவின் அடிப்படைகள் சரியாக இல்லை என சொல்லி விட முடியாது. அதன் அடிப்படைகள் அப்படியே இருக்கின்றன.ஒரு தொழில்முனைவோனாக, நான் நம்பிக்கையான எண்ணம் கொண்டவன்.
எனவே, என் பார்வை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானதாக இருக்கலாம். குறுகிய கால சிந்தனையைக் கொண்டு, ஒருபோதும் நீண்ட கால வாய்ப்புகளை உருவாக்க முடியாது. மத்திய அரசின், ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். இவ்வாறு அவர் கூறினார்.அதானி நிறுவனத்தில், 1994ல், 1 ரூபாயை முதலீடு செய்திருந்தால், அது இன்று, 800 மடங்கு வருமானத்தை தந்திருக்கும். கவுதம் அதானி தலைவர் அதானி குழுமம்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|