மின்னணு வர்த்தக கொள்கையை  விரைவில் அறிவிக்க கோரிக்கை மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க கோரிக்கை ... குறுந்தொழில் - ஓர் புதிய உதயம்! குறுந்தொழில் - ஓர் புதிய உதயம்! ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘இக்ரா’வின் புதிய கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
23:05

மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 11 சதவீதமாக இருக்கும் என, உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ அறிவித்துள்ளது.

இது, இதற்கு முன் கணித்து அறிவித்திருந்ததை விட குறைவாகும்.நடப்பு நிதியாண்டுஇக்ரா நிறுவனம், இதற்கு முன், நாட்டின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், மைனஸ் 9.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது தன் கணிப்பை மாற்றி, மைனஸ் 11 சதவீதம் என அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம், மைனஸ் 23.9 சதவீதம் என, வரலாற்றில் இல்லாத வகையிலான சரிவைக் கண்டதை அடுத்து, பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய முந்தைய கணிப்பை மாற்றி அறிவித்து வருகின்றன. சில நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, மைனஸ் 14 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று கூட அறிவித்துள்ளன. இருப்பினும், ரிசர்வ் வங்கி தன் கணிப்பை இன்னும் வெளியிடவில்லை.

எந்த மாற்றமும் இல்லை

ஆனாலும், வளர்ச்சி சரிவைக் காணும் என்பதை மட்டும் தெரிவித்து வருகிறது.இக்ரா தன் கணிப்பை மாற்றி அறிவித்திருந்தாலும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம், மைனஸ் 12.4 சதவீதமாக இருக்கும் என்ற தன் முந்தைய கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)