நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘இக்ரா’வின் புதிய கணிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘இக்ரா’வின் புதிய கணிப்பு ...  எல்.ஐ.சி.,பங்குகள் விற்பனை அமைச்சரவை அனுமதிக்கு முயற்சி எல்.ஐ.சி.,பங்குகள் விற்பனை அமைச்சரவை அனுமதிக்கு முயற்சி ...
குறுந்தொழில் - ஓர் புதிய உதயம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
10:21

எம்.எஸ்.எம்.இ., எனப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே, நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கின்றன. இந்தியாவில், அரசின் உதவி எதிர்பார்க்காமல், அரசு வேலைக்காக காத்திருக்காமல் கோடிக்கணக்கானோர், சுயமாக தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொண்டிருப்பதே எம்.எஸ்.எம்.இ.,யின் கம்பீரம். அவற்றின் வாயிலாக, கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்பும் பெற்று வருகின்றனர்.


சமீபத்திய (மே 2020) புள்ளி விவரங்களின் படி, நாட்டில், ஆறு கோடியே, 30 லட்சம் மைக்ரோ தொழில் நிறுவனங்கள் உள்ளன. 33 ஆயிரம் சிறுதொழில்கள், 5,000ம் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. நாட்டில் ஒட்டு மொத்த நிறுவனங்களில், 15 சதவீதம், தமிழகத்தில் அமைந்துள்ளன. பதிவு செய்யப்பட்ட, 7 லட்சம் நிறுவனங்கள் வாயிலாக, 8,000ம் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக, அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.'மைக்ரோ' என குறிப்பிடப்படும் குறுந்தொழில்கள் குறித்த விளக்கத்தையும், பதிவு செய்வதற்கான புதிய விதிகள், சலுகைகள் குறித்து பார்ப்போம்.


எது மைக்ரோ நிறுவனம்?

தொழிற்சாலை, இயந்திரங்கள், தளவாடங்கள் போன்றவற்றுக்கான முதலீடு ரூ.ஒரு கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். விற்றுமுதல் ரூ.5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தி துறை மற்றும் சேவை துறை இரண்டுக்கும், இதுவே உச்ச வரம்பு.மைக்ரோ நிறுவனம் புதிதாக தொடங்குபவரோ, முன்பே தொடங்கி நடத்தி வருபவரோ, எம்.எஸ்.எம்.இ., அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'உத்யம்' (உதயம்) என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். https://udyamregistration.gov.in என்ற இணையதளத்தில், அதற்கான பதிவை மேற்கொள்ளலாம். பதிவு செய்வதற்கு கட்டணம் ஏதுமில்லை. முன்பே இயங்கும் நிறுவனங்கள், 'உத்யோக் ஆதார்' கீழ் பதிவு செய்து வைத்திருந்தாலும், வேறு பதிவுகள் செய்திருந்தாலும், ஜூலை 1ம் தேதி முதல், 'உதயம் பதிவு' அவசியம்.


ஆவணங்கள் அவசியமில்லை

இணையதளம் வாயிலாக செய்யப்படும் 'உதயம் பதிவு'க்கு எந்த ஆவணங்கள், சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டியதில்லை. இந்த பதிவு, முழுக்க முழுக்க சுய அறிவித்தலை (Self declaration) அடிப்படையாக கொண்டு செய்யப்படுகிறது.பதிவு செய்வதற்கு, பயனரின் ஆதார் எண், பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விபரங்களை ஆன்லைனில் வழங்க வேண்டும். பதிவு செய்தபின், மைக்ரோ நிறுவனத்தின் 'பதிவு எண்' வழங்கப்பட்டு விடும். அதன்பின், 'உதயம் பதிவு' சான்றிதழ் வழங்கப்படும். பதிவை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.'உதயம் பதிவு' சான்றிதழில், 'கியூஆர் கோட்' இடம்பெற்றிருக்கும். அதன் வாயிலாக, எம்.எஸ்.எம்.இ., அமைச்சக போர்ட்டலில் உள்ள இணைய பக்கத்தையும், தொழிற்சாலை குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு தொழில் நிறுவனமும், ஒரு 'உதயம் பதிவு'க்கு மேல் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், ஒரே பதிவில், உற்பத்தி அல்லது சேவை அல்லது இரண்டும் உள்ளடக்கிய பல்வேறு நடவடிக்கைகளை குறிப்பிடலாம். பின் இணைத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.


பதிவால் வரும் பலன்

'உதயம் பதிவு' செய்துள்ள மைக்ரோ நிறுவனங்கள், இணை/அடமானம் இல்லாமல், ஒரு கோடி வரை எளிதாக வங்கி கடன் பெறமுடியும். முத்ரா கடனுக்கு அந்த நிறுவனம் தகுதியுடையதாகிறது. அரசு டெண்டர்களை பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வங்கி நடைமுறை மூலதன கடனுக்கான வட்டி வீதத்துக்கு, ஒரு சதவீதம் விலக்கு கிடைக்கிறது. வரிச்சலுகைகள், வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமைக்கான அரசு கட்டணங்களுக்கு சிறப்பு தள்ளுபடி உண்டு.


பணத்திற்கு கியாரண்டி

பொருள் வாங்கியவரிடமிருந்து பணம் வருவதில் ஏற்படும் தாமதத்திற்கு பாதுகாப்பு, குறித்த காலத்துக்குள் பணம் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டால், மத்தியஸ்தம் செய்து வைப்பதற்கான வழி உண்டு. விற்ற பொருளுக்கான பணம் திரும்ப வரத்தாமதமாகும்போது, TReDS (Trade Receivables electronic Discount System) பாதுகாப்பு கிடைக்கிறது. அதன்படி, TReDS போர்ட்டலில் விற்பவரும், வாங்குபவரும் பதிவு செய்திருந்தால், 'டிஸ்கவுண்ட்' வாயிலாக, பணம் கிடைப்பது உறுதியாகும். வெளிநபர்கள், கார்ப்பரேட், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்திருந்தாலும், பணம் திரும்ப வருவதற்கு உதவி கிடைக்கும்.


அரசு ஆர்டர்

மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில், குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அதுவும், 'உதயம் பதிவு' அவசியம் செய்திருக்க வேண்டும். உற்பத்தி, சந்தை போட்டியை சமாளித்தல், மார்க்கெட்டிங், புதிய தொழில்நுட்பம், உள்நாட்டு சந்தை முதல் உலக சந்தை வரை போட்டியிட உதவுதல் போன்றவற்றுக்கு, ஆதரவு கிடைக்கும்.அறிவுசார் சொத்துரிமை பெறுவதற்கான ஊக்கம், தொழிலில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவும் கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியத்திட்டம் கிடைக்கும்.ஒரு மூலப்பொருள் வாங்குவதில் தொடங்கி, அவை உற்பத்தி செய்து சந்தைக்கு செல்லும் வரைக்குமான அரசின் ஆலோசனைகள், உதவிகள் கிடைக்கும். தற்போது 'கோவிட்-19' நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை அனைத்தையும், ஒரு மைக்ரோ தொழில் நிறுவனம் 'உதயம் பதிவு' செய்திருந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.


புதிய உதயம்

'உதயம் பதிவு' செய்யப்பட்ட, மைக்ரோ நிறுவனத்தின் நிரந்தரக் கணக்கு எண் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி இணைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் ஆண்டுத்தொழில் தொகை குறித்த விவரங்கள், சம்பந்தப்பட்ட அரசு தகவல் தொகுப்பில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் 'ஆன்லைன் போர்ட்டல்' வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி.ஐ.என்., அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பொதுவாக, தனிப்பட்ட நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் இருக்கும். அதனால் அந்த துறைக்கான சட்டங்கள், சலுகைகள் எளிதல் அவர்கள் புரிந்து கொள்வர். ஆனால், தொழிலாளியோடு தொழிலாளியாக, ஒரு முதலாளியே பணியாற்றும் பொருளாதார சூழல் கொண்ட, 'மைக்ரோ' நிறுவன தொழில்முனைவோர், தங்களுக்கென்று தனியாக நிதி, வரி ஆலோசகர்கள் வைத்துக்கொள்ள இயலாது.பொதுவாக, மைக்ரோ தொழில் நிறுவனம் நடத்துபவர்கள், கொள்முதல், உற்பத்தி, மார்க்கெட்டிங், வசூல், வங்கி நடவடிக்கைகள் என்று அனைத்தையும், நிறுவனத்தை நிர்வகிக்கும் ஒருவரே பார்க்க வேண்டி இருப்பதன் காரணமாகவும், அரசின் விதிமுறைகள், சட்டங்கள், சலுகைகள், கடன் திட்டங்கள் அறிந்து வைத்திருக்க நேரம் இருப்பதில்லை. மைக்ரோ தொழில் சலுகைகள் குறித்து அவர்களுக்கு எளிமையாக விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அரசின் சலுகைகளை அறிந்து கொண்டால் தான், அதன் பலனை அறுவடை செய்ய முடியும்.உங்கள் தொழில் வாழ்வில் புதிய உதயம் தொடங்க வாழ்த்துக்கள்!


ஜி.கார்த்திகேயன்


வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: Karthi@gkmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)