பதிவு செய்த நாள்
01 அக்2020
21:08

புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 95 ஆயிரத்து, 480 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. நடப்பு நிதியாண்டில் மிக அதிகமாக வசூல் ஆகியிருப்பது, செப்டம்பர் மாதத்தில் தான்.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில், நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில், 95 ஆயிரத்து, 480 கோடி ரூபாய் வசூல் ஆகிஉள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஆகியிருக்கும் வசூலை விட இப்போது, 4 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதில், மத்திய ஜி.எஸ்.டி., 17 ஆயிரத்து, 741 கோடி ரூபாயாகும். மாநில ஜி.எஸ்.டி., 23 ஆயிரத்து, 131 கோடி ரூபாயாகும். ஒருங்கிணைந்த வரி வசூல், 47 ஆயிரத்து, 484 கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|