ஆண்ட்ராய்டு மினி ஆப் ஸ்டோர் கூகுளுக்கு ஷாக் கொடுத்த பேடிஎம் ஆண்ட்ராய்டு மினி ஆப் ஸ்டோர் கூகுளுக்கு ஷாக் கொடுத்த பேடிஎம் ... என்.பி.ஏ., வரையறை மாற்ற வேண்டிய தருணமா? என்.பி.ஏ., வரையறை மாற்ற வேண்டிய தருணமா? ...
சோனியுடன் இணையும் முடிவு கைவிட்டது ரிலையன்ஸ் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2020
22:01

புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, வயாகாம் 18 மீடியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா உடன் இணைவதாக இருந்த முடிவு, திரும்ப பெற இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

கூடுதல் முதலீடுமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி வணிகமான, வயாகாம் 18 மீடியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைவது என முடிவு எடுக்கப்பட்டி இருந்தது.

இந்நிலையில், அந்த முடிவிலிருந்து ரிலையன்ஸ் பின் வாங்கி இருக்கிறது. தற்போது இணைவதற்கு பதிலாக, டிஜிட்டல் கருத்துருவாக்கங்களில் கூடுதலாக முதலீடுகள் செய்வது என, முடிவு செய்திருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இது குறித்து விபரம் அறிந்தோர் கூறியதாவது:டிஜிட்டல் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு என்பது தொலைதொடர்பு வணிகமான ஜியோவின் முக்கிய துாண்களில் ஒன்றாக இருக்கும். இத்தகைய பிரிவில் கூடுதலாக முதலீடு செய்வதன் மூலம், ஓ.டி.டி., துறையில் நிலைபெறவும் முடிவெடுத்துள்ளது.

பல பொழுதுபோக்கு நிறுவனங்கள் ரிலையன்ஸ் உடன் இணைந்து செயல்பட முன்வந்து இருக்கின்றன. இதன் காரணமாகவே சோனியுடன் இணையும் முடிவு கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வயாகாம் 18 மீடியா நிறுவனம், டிவி18 பிராட்காஸ்ட் மற்றும் வயாகாம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். இதில், டிவி 18 வசம், 51 சதவீத பங்குகள் உள்ளன. அதிக சேனல்தற்சமயம் வயாகாம் 18 நிறுவனம், 7 மொழிகளில், 40க்கும் அதிகமான சேனல்களை நடத்தி வருகிறது.


மேலும், வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், வீடியோ ஸ்டிரீமிங் தளமான, வூட் ஆகியவற்றையும் நடத்தி வருகிறது.சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, 20க்கும் மேற்பட்ட சேனல்களை நடத்தி வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)