சோனியுடன் இணையும் முடிவு கைவிட்டது ரிலையன்ஸ் நிறுவனம் சோனியுடன் இணையும் முடிவு கைவிட்டது ரிலையன்ஸ் நிறுவனம் ... அனைத்து வைப்பீட்டாளர்களுக்கும் பாதுகாப்பை லக்ஷ்மி விலாஸ் பேங்க் உறுதி செய்கிறது அனைத்து வைப்பீட்டாளர்களுக்கும் பாதுகாப்பை லக்ஷ்மி விலாஸ் பேங்க் உறுதி ... ...
என்.பி.ஏ., வரையறை மாற்ற வேண்டிய தருணமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2020
10:17

கொரோனா பெருந்தொற்று காரணமாக, வங்கிகளில் பெற்ற கடன்களுக்கான தவணை செலுத்துவதில், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, ஆறு மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டன. வழங்கப்பட்ட சலுகையில், நிலுவை தவணைகளுக்கு, வங்கிகள், வட்டிக்கு வட்டி போடுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், ‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை எந்தவொரு கடனையும் வராக்கடனாக அறிவிக்கக் கூடாது’ என்று, உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

வட்டிக்கு வட்டி- ஆறுதல் அறிவிப்பு
உச்சநீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, ‘வீட்டுக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன், வாகனக் கடனுக்கான தவணைக்கு வட்டி இல்லை. எம்.எஸ்.எம்.இ., கடன், கிரெடிட் கார்டு கடன் பெற்றவர்களுக்கு, கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதங்களில், கடன் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும், இந்த சலுகை பொருந்தும்’ என்று தெரிவித்தது. ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தும்.கொரோனா ஊரடங்கால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அறிவிப்பு ஆறுதல் அளித்தது. ஆனால், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், தொழில்துறையினர் கூடுதலாக எதிர்பார்ப்பது, ‘என்.பி.ஏ.,’ வரையறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது தான். அதுகுறித்து பார்ப்போம்.

எது என்.பி.ஏ..?
மேற்கத்திய நாடுகள் பின்பற்றி வந்த ‘வராக்கடன் முறை’, இந்தியாவிலும், 1993ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, அசல் மற்றும் வட்டியை தொடர்ந்து செலுத்தாத ஒருவரின் கணக்கு, வராக்கடன் (Non-Performing Asset – NPA) என்று வங்கிகளால் வகைபடுத்தப்படும். தொடக்க காலத்தில், ஓர் ஆண்டு வரை அசல் அல்லது வட்டி திருப்பித் தராத கணக்குகள், என்.பி.ஏ., என்ற வரையறுக்கு உட்படுத்தப்பட்டது. பின், அது ஆறு மாதமாக குறைக்கப்பட்டு, தற்போது, மூன்று மாதமாக உள்ளது.வங்கியில் கடன் பெற்ற எந்த ஒரு தொழிலதிபரும், அவர் கணக்கு, ‘என்.பி.ஏ.,’ என்று அறிவித்தால், அவர் வெடவெடத்து போய்விடுவார். ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கு என்.பி.ஏ.,வாக மாற்றப்பட்டால், அதன்பின், அந்த நிறுவனத்துக்கு எந்த வங்கியிலும் அவ்வளவு எளிதாக கடன் கிடைக்காது.

அரசு பணமே தாமதம்
காலப்போக்கில், என்.பி.ஏ.,வுக்கான கால அளவு குறைப்பால், வங்கியில் கடன் பெற்ற நிறுவனங்கள், என்.பி.ஏ., ஆகிவிடக்கூடாது என்ற அச்சத்துடனேயே, வாழ்க்கையை கழிக்கின்றனர். ஒவ்வொரு தொழில் நிறுவனத்திற்கும், அதன் ஸ்டாக் நாட்கள், கடன் நிலுவை நாட்கள், வாங்கிய பொருட்களுக்கான நிலுவை நாட்கள் போன்றவற்றை கணக்கிட்டு, வங்கிகள் நடைமுறை மூலதன கடன் கொடுக்கப்படுகிறது.இதில், ஒரு எதார்த்தமான உண்மை என்னவென்றால், பொருட்கள் சப்ளை செய்த பல நிறுவனங்களுக்கு, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் கூட, இரண்டு அல்லது மூன்று மாத தாமதத்துக்கு பிறகே பணம் வழங்குகின்றன. அரசு சாராத பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்பவர்களுக்கும், அதே நிலையே உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, பெரிய நிறுவனங்கள், 45 நாட்களுக்குள் பணம் கொடுக்க வேண்டும் என்கிற சட்டம் இருந்தாலும், முழு அளவில் நடைமுறை படுத்தப்படவில்லை. இதனால், நடைமுறை மூலதன சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு, உரிய நேரத்தில் வங்கி பாக்கியை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு துறைகள் வழங்க வேண்டிய பணமே, மூன்று மாதங்கள் தாமதமாகும் போது, வங்கியில் வாங்கிய கடன்களுக்கு மட்டும், மூன்று மாதம் கெடுவில், என்.பி.ஏ., அறிவிப்பது தொழில் நிறுவனங்களை தடுமாற செய்கின்றன.நம் நாட்டில், வங்கியில் கடன் பெற்று தொழில் செய்பவர்களை, தற்போதுள்ள ‘90 நாள்’ என்ற என்.பி.ஏ., வரையறை முடக்கிப்போடும் ஆபத்தாக உள்ளது.

வங்கிகள் நிலை?
வங்கிகளால் என்.பி.ஏ., என்று வரையறுக்கப்பட்டாலும், அவற்றில் பெரும் பகுதி, பின்னாளில் வசூல் செய்யப்பட்டு விடுகிறது. கணக்கில் என்.பி.ஏ., அதிகரிக்கும் பட்சத்தில், வங்கிகளின் லாபம் பாதிக்கப்படுகிறது. இதனால், வங்கிகளின் பங்கு சந்தையும் பாதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வங்கி நிர்வாகங்களுக்கு மிகுந்த அழுத்தம் ஏற்படுகின்றன. வங்கி மேலாளர்கள், தவணை செலுத்தாத பல கணக்குகளை, என்.பி.ஏ., அல்ல என்று, பல்வேறு வாதங்களை சொல்லி ஆடிட்டர்களை நிர்பந்தம் செய்யும் நிலையும் உள்ளது.

வராக்கடன் உயரும்
தற்போது, கொரோனா ஊரடங்கால், இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள கடன் அளவு, ரூ.15 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பே, வேறு பல காரணங்களால் தொழில் கடன் பாதிப்பு அளவு, ரூ.22.02 லட்சம் கோடியாக இருந்தது.கொரோனா காரணமாக, தற்போது வராக்கடன் அளவு, 12.5 சதவீதத்தில் இருந்து, 14.7 சதவீதம் என்ற அளவில் உயரலாம் என்று, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, இந்திய வங்கிகளுக்கான ‘நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை’ குறிப்பிடுகிறது.‘வங்கிகளில் வராகடன் அளவு, கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும்’ என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால், வராக்கடன் அளவை குறைக்கவும், தொழில்துறையினர் கடன் சுமை மறந்து, நிம்மதியாக தொழில் தொடரவும், கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டிக்கவும், கடன் மறுசீரமைப்பு வாய்ப்பை தொழில் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது. 2020 டிச., 31க்கு பின், இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது, 180 நாட்களுக்குள் அவற்றை செயல்படுத்த வேண்டும்.

10 லட்சம் கோடி
தற்போது, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கடன் மறுசீரமைப்பு சலுகையின்படி, ரூ.6 லட்சம் கோடி முதல் ரூ.10 லட்சம் கோடி கடன் மறுசீரமைப்பு கொள்ளப்படலாம் என்கிறது ‘முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு’ நிறுவனமான ‘இக்ரா’. இதில், தனி நபர் (பர்சனல் லோன்) ரூ.2.1 லட்சம் கோடியும் மறுசீரமைப்பு செய்யப்படலாம் என்கிறது.‘கடன் மறுசீரமைப்பு’ என்பதை எப்படி தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை என்ன என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட, இன்போசிஸ் முன்னாள் சேர்மன் கே.வி.காமத் தலைமையிலான குழு, கட்டுமானம், ரியல் எஸ்டேட், லாஜிஸ்டிக்ஸ், ஹோட்டல்கள், விமானம், சுற்றுலா உட்பட, 26 துறைகளுக்கு கடன் மறுசீரமைப்பு அளிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

பலன் தருமா
கடன் மறுசீரமைப்பு, வட்டி தள்ளுபடி, வட்டிக்கு வட்டி நீக்கம் போன்றவையெல்லாம், தற்காலிக தீர்வுகளே. நமது தொழில் நிறுவனங்களின் தொழில் இயல்பிற்கேற்ப, ‘என்.பி.ஏ.,’ வரையறை மாற்றப்படாதவரை, பொருளாதாரத்துடன் அல்ல, ‘வராக்கடன்’களுடன் தான் வங்கி நிர்வாகங்களும், அரசு எந்திரங்களும் போராட வேண்டி இருக்கும்.வராக்கடன் புள்ளி விவரங்களுடன் மல்லுக்கட்ட வேண்டுமா அல்லது என்.பி.ஏ., வரையறைகளை மாற்றி தொழில்துறையினருக்கு, பிரகாசமான பாதை அமைத்துத்தர வேண்டுமா? என்பதை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம்.

ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில் : karthi@gkmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)