என்.பி.ஏ., வரையறை மாற்ற வேண்டிய தருணமா?என்.பி.ஏ., வரையறை மாற்ற வேண்டிய தருணமா? ...  நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று துவங்குவதாக அறிவிப்பு நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று துவங்குவதாக அறிவிப்பு ...
அனைத்து வைப்பீட்டாளர்களுக்கும் பாதுகாப்பை லக்ஷ்மி விலாஸ் பேங்க் உறுதி செய்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2020
19:49

சென்னை : லக்ஷ்மி விலாஸ் வங்கி பற்றி தற்போதைய சூழ்நிலையின் உண்மை நிலையை தவறாக சித்தரித்து செய்திகள் வந்துள்ளன. இதை யாரும் நம்ப வேண்டாம், வங்கியிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என தனது வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கி 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பரவலாக இயங்கி வரும் 555-க்கும் அதிகமான கிளைகளின் வலுவான செயல்பாடுகளின் மூலம் 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. 970 ஏடிஎம் களுடன் 19 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திலும் இந்த வங்கி செயல்படுகிறது. இந்நிலையில் இவ்வங்கி கடும் நஷ்டத்தை எதிர் கொண்டு வருவதாகவும், மக்களின் நன்மதிப்பை இழப்பதும் போன்று செய்திகள் பரவி வருகின்றன. இதை மறுத்து லக்ஷ்மி விலாஸ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு :

வங்கியின் அன்றாட செயல்களை நடத்துவதற்காக மூன்று பேர்கள் கொண்ட இயக்குநர் குழுவை (committee of directors - CoD) ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் நியமித்துள்ளது. இந்த இயக்குநர் குழு, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரிக்கு (MD & CEO) உரிய அதிகாரத்துடன் இடைக்காலத்தில் செயல்படும். எல்.வி.பி தனது பங்குதாரர்களுக்கு (stakeholders) அதன் வாக்குறுதி மற்றும் உறுதிப்பாட்டை பூர்த்தி செய்ய போதுமான அளவு பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூற விரும்புகிறது.

அதன் முதிர்ச்சியடைந்த வைப்புத்தொகை (maturing deposits) மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை, வாடிக்கையாளர்கள் எப்போது தேர்வு செய்தாலும், எந்த தாமதமும் இன்றி அது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. முதிர்ச்சி அடையும் வைப்பு நிதிகளின் மாற்றம் மற்றும் புதிய வரவுகள் (புதிய வைப்புத் தொகை) ஆகியவை வங்கியில் நடந்துகொண்டிருக்கிறது. பணப்புழக்கம் (liquidity) மற்றும் சில முக்கிய பணப்புழக்க விகிதங்கள் குறித்து தினசரி அறிக்கைகளை ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிப்பது வங்கி ஒழுங்குமுறை பொறுப்பாக உள்ளது.

எல்.வி.பி –ன் பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (Liquidity Coverage Ratio -LCR) தொடர்ந்து 250% க்கு மேல் உள்ளது, இது வங்கியின் நல்ல பணப்புழக்க நிலையை குறிக்கிறது. ஒழுங்குமுறை அமைப்பின் குறைந்தபட்ச தேவை 100% என்றாலும், நல்ல வங்கிகள் அதிக சதவீதத்தை பராமரிக்க முயற்சி செய்கின்றன.

கடந்த ஒரு வாரத்தில் வங்கியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு தொகை எதுவும் வெளியேறவில்லை என்பதை வங்கி தெரிவிக்க விரும்புகிறது. எந்தவொரு சொத்து -பொறுப்பு தவறான பொருத்தத்தையும் (assets-liability mis-match.) வங்கி கொண்டிருக்கவில்லை. வங்கிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு (ரிசர்வ் வங்கி) நிதி / பணப்புழக்க நிலையை (funds / liquidity position) மிக அடிக்கடி கண்காணித்து வருகிறது. மேலும் அதன் பார்வையில், வங்கியில் எந்த சிக்கலும் இல்லை.

இந்த வங்கியின் வைப்புத்தொகையில் (liabilities) 21% ரொக்கம் மற்றும் பத்திரங்கள் (Cash and Securities) இரண்டிலும் வைத்திருக்க வங்கி ஒழுங்குமுறை அமைப்பான ரிசர்வ் வங்கியிடம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த குறைந்தபட்ச தேவையை விட மிக அதிகமான விகிதத்தில் எல்.வி.பி-ல் பராமரிக்கப்படுகிறது.

எல்.வி.பி தனது வட்டி பொறுப்புகளை (interest obligations) அடுக்கு II பத்திரதாரர்களுக்கு (Tier II bond holders) புதன்கிழமை (செப்டம்பர் 30, 2020) அன்று வழங்கியுள்ளது மற்றும் ரூ. 15 கோடி வட்டி கொடுத்துள்ளது.. இதுபோன்ற எந்தவொரு பொறுப்பிலும் வங்கி ஒருபோதும் தவறவில்லை. புதிய மூலதனத்தை (capital) திரட்டுவதற்கான இறுதி கட்டத்தில் வங்கி உள்ளது. இதனை விடாமுயற்சியுடன் மேற்கொண்டு வருகிறது. விரைவில் மூலதனம் வங்கியில் சேர்க்கப்படுவதை அறிவிக்கும். அனைத்து வைப்பு நிதியாளர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது வங்கியின் பிரதான பொறுப்பு என்று எல்.வி.பி உறுதியளிக்க விரும்புகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)