பதிவு செய்த நாள்
09 அக்2020
22:01

புதுடில்லி:வங்கிகள், இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என, ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும் கூட, வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் வரை இதே நிலை தான்.வங்கிகள் கடன் வழங்குவது என்பது, எங்களுக்கு மிக முக்கிய மான ஒன்றாகும். ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு, அவை இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கும் கடனை வழங்குவதை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
குறைவான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் கையில் அதிக பணம் இவற்றை கருத்தில் கொண்டு, வங்கிகள் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கும் கடனை அதிகரிக்க வேண்டும்.இதனால், அதிகளவிலான வாடிக்கையாளர்கள், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்க முடியும்.ஜி.எஸ்.டி., குறைப்பு மிகவும் தாமதமாகிவிட்டது. அது குறித்து எதுவும் நடக்கவில்லை.
ஜி.எஸ்.டி., குறைப்பு குறித்து பேசுவது வாடிக்கையாளர்களை குழப்புகிறது. எனவே அது குறித்து பேசாமல், துறையினர் தேவையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|