பதிவு செய்த நாள்
10 அக்2020
21:35

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான, ஓ.என்.ஜி.சி., அதன் துணை நிறுவனங்களான, எச்.பி.சி.எல்., எனும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் எம்.ஆர்.பி.எல்., எனும் மங்களூரு ரீபைனரி அண்டு பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் இணைப்பை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமான, ஓ.என்.ஜி.சி., கடந்த, 2018ம் ஆண்டு, எச்.பி.சி.எல்., நிறுவனத்தை, 36 ஆயிரத்து, 915 கோடி ரூபாயில் கையகப்படுத்தி முடித்தது.எச்.பி.சி.எல்., நிறுவனத்தை கையகப்படுத்திய பின், ஓ.என்.ஜி.சி., வசம் இரு சுத்திகரிப்பு துணை நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த இரு நிறுவனங்களையும் இணைக்கும் முயற்சிகள் துவக்கப்பட்டன. தற்போது, அது தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து,ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் தலைவர் சஷி ஷங்கர் கூறியதாவது:இரு நிறுவனங்களின் இணைப்பினால் மிகுந்த பலன் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இருப்பினும், இந்த இணைப்புக்கு முன், எம்.ஆர்.பி.எல்., நிறுவனத்தை, ஓ.எம்.பி.எல்., எனும், ஓ.என்.ஜி.சி., மங்களூரு பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிட்டு உள்ளோம். இது முடிந்த பிறகுதான், எச்.பி.சி.எல்., மற்றும் எம்.ஆர்.பி.எல்., நிறுவன இணைப்புக்கான முயற்சிகள் எடுக்கப்படும். எனவே, இவற்றின் இணைப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|