பதிவு செய்த நாள்
10 அக்2020
21:48

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகளில், கடந்த, 45 நாட்களில், 1.58 கோடி பேர், டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறைக்கு வந்திருக்கின்றனர் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:டிஜிட்டல் வசதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் பலனாக, 45 நாட்களில், பொதுத்துறை வங்கிகளில், 1.58 கோடி பேர் டிஜிட்டல் முறைக்கு வந்துள்ளனர்.கடந்த, ஆகஸ்ட், 15ம் தேதியன்று, இந்த பிரசாரம் துவங்கப்பட்டது.
இந்த பிரசாரத்தின் மூலம், வங்கிகளின் டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த பிரசார காலத்தில், 50 ஆயிரம் பாயின்ட் ஆப் சேல் மிஷின்கள், 3 லட்சம் கியூ ஆர் கோடுகள், 18 ஆயிரம் பிம் ஆதார் பணம் செலுத்தும் சாதனங்கள் ஆகியவற்றின் மூலம், பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பிரசாரத்தை ஒட்டி, வங்கிகளிடம் ஒரு கிளைக்கு குறைந்த பட்சம், 100 புதிய வாடிக்கையாளர்களை சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|