பதிவு செய்த நாள்
11 அக்2020
22:02

தங்க இ.டி.எப்., முதலீடு பிரிவில், செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து ஆறாவது மாதமாக நல்ல ஆதரவு இருப்பதாக, ‘மியூச்சுவல் பண்ட்’ நிறுவனங்களின் சங்க புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, இ.டி.எப்., நிதிகள் கருதப் படுகின்றன. இவை, தங்கத்தை அடிப்படையாக கொண்ட, பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதிகளாகும். தங்கத்தில் காகித வடிவில் முதலீடு செய்ய உதவுகின்றன.
தங்க இ.டி.எப்., நிதிகளில் நிகர நிதி வரத்து செப்டம்பர் மாதம், 597 கோடி ரூபாயாக இருந்த தாகவும், தொடர்ந்து ஆறாவது மாதமாக இந்த பிரிவில் நிகர நிதி வரத்து ஏற்பட்டிருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் இது, 5,957 கோடி ரூபாயாக உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்த நிலையில், தங்க இ.டி.எப்., முதலீட்டில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
பொருளாதார பாதிப்பு மற்றும் கொரோனா முடக்கம் ஆகிய காரணங்களால், தங்கம் பாதுகாப்பான முதலீ்டாக கருதப்படுகிறது.கொரோனா உண்டாக்கிய நிச்சயமற்ற சூழல் தொடர்வதும், தங்கம் முதலீடு நோக்கில் தொடர்ந்து ஈர்ப்புடையதாக இருந்து வருவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|