பதிவு செய்த நாள்
13 அக்2020
22:51
மும்பை : இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாயை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு நெருங்கி இருக்கிறது.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், இன்போசிஸ் நிறுவன பங்கு விலை, 3 சதவீதம்அதிகரித்து, 1,164.70 ரூபாயைத் தொட்டு, புதிய சாதனையைப் படைத்தது. பங்கு விலை
அதிகரித்த காரணத்தினால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும் அதிகரித்து, 4.95 லட்சம் கோடி ரூபாயாக வர்த்தகத்தின் இடையே உயர்ந்தது.
இதற்கிடையே, இன்போசிஸ் நிறுவனத்தின், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த
இரண்டாவது காலாண்டு அறிக்கை, இன்று வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது காலாண்டு அறிக்கை முடிவுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில், இந்நிறுவனப் பங்குகள் விலை மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டக் கூடும் என, பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அப்படி, 5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டினால், இந்த உயரத்தை தொட்ட, 5வது இந்திய நிறுவனமாக, இன்போசிஸ் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|