பதிவு செய்த நாள்
14 அக்2020
09:50

வாஷிங்டன்: பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ், நான்கு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் 30ந் தேதி முதல் விற்பனைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள அந்நிறுவனத்தில் இருந்து காணொலி வாயிலாக நடைபெற்றது. வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஐபோன் 12, ஐபோன் 12 மேக்ஸ், ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஆகிய 4 வகைகளில் ஐபோன் 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் புரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச்சும், மற்ற மாடல்களில் 6. 1 இன்ச்சும் கொண்ட, ஓஎல்இடி டிஸ்பிளே வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், A14 பையோனிக் புராசசர்களுடன், 5ஜி இணைய சேவையை ஏற்கும் வகையிலான தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.128ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று சேமிப்புத் திறன்களில் கிடைக்கும்.
ஐபோன் புரோ மற்றும், ஐபோன் புரோ மேக்ஸின் விலை முறையே, இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 900 மற்றும் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256ஜிபி என மூன்று சேமிப்புத் திறன்களின் கிடைக்கும், ஐபோன்12 மற்றும் ஐபோன் 12 மினியின் விலை, முறையே ரூ.79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அவற்றுடன், 10 ஆயிரம் ரூபாய் விலையில் மினி ஹோம்பாட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. அக்., 30ம் தேதி முதல், இந்திய சந்தையில் ஐபோன்கள் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|