பதிவு செய்த நாள்
15 அக்2020
02:39

புதுடில்லி : எதிர்கால முதலீடுகளுக்கு ஏற்ற முதல் மூன்று நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழிலக கூட்டமைப்பு, இ.ஒய்., நிறுவனத்துடன் இணைந்து,
அன்னிய நேரடி முதலீடு குறித்து, பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், முதலீடுகளுக்கான முக்கியமான மூன்று நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக உருவெடுக்கும் என கருதுவது தெரியவந்துள்ளது. ஆய்வில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், 2025ல், உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும், உலகின் முன்னணி தயாரிப்பு இடங்களுள் ஒன்றாகவும் இருக்கும் என்றும்
தெரிவித்துஉள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில், 25 சதவீதம் பேர், இந்தியாவை தலைமையிடமாக கொண்டிராத, பன்னாட்டு நிறுவனங்களை பிரதிநிதிப்படுத்தியவர்கள். இந்நிறுவனங்களின் எதிர்கால முதலீட்டுக்கான முதல் தேர்வாக, இந்தியா இருப்பதாக தெரிவித்துள்ளனர். அரசியல் ஸ்திரத்தன்மை, சந்தை திறன், திறன்மிகு தொழிலாளர்கள் ஆகியவையே இந்த தேர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக, ஆய்வில் பங்கேற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவை தவிர, மலிவான தொழிலாளர்கள், கொள்கை சீர்திருத்தங்கள், மூலப்பொருட்கள்
எளிதாக கிடைப்பது ஆகியவையும் இந்தியாவில் முதலீடு செய்வதை ஈர்க்கும் அம்சங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அண்மைக் காலத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்களான, நிறுவன வரி குறைப்பு, எளிதாக தொழில் துவங்குதல், தொழிலாளர் சட்டங்களை எளிமையாக்குதல், அன்னிய நேரடி முதலீட்டில் மாற்றங்கள் ஆகியவையும் புதிய முதலீடுகளை ஈர்க்க உதவும் அம்சங்களாக இருப்பதாக, ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|