பதிவு செய்த நாள்
15 அக்2020
02:44

புதுடில்லி : வரும் பண்டிகை காலம், ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு முக்கியமான காலம். இதுவே, அடுத்த, 12 மாதங்களுக்கான தேவை குறித்த துறையின் பார்வையைத் தீர்மானிக்கும் என, ரியல் எஸ்டேட் தரகு நிறுவனமான, பிராப்டைகர் தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு காலாண்டில் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. நாட்டின், 8 முக்கிய நகரங்களில், செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை குறித்த அறிக்கையை
இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், 8 நகரங்களில், மொத்தம், 35 ஆயிரத்து, 132 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு இதே காலாண்டில், மொத்தம், 81 ஆயிரத்து, 886 வீடுகள் விற்பனை ஆகியிருந்தன. இருப்பினும், ஏப்ரல் - ஜூன் காலாண்டினை விட, மதிப்பீட்டு காலாண்டில், விற்பனை, 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா, டில்லி தலைநகர் பிராந்தியம், மும்பை
பெருநகர பிராந்தியம், அகமதாபாத், புனே ஆகிய, 8 நகரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. சென்னையில், 40 சதவீதம் அளவுக்கு சரிவு காணப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில், வீட்டு விலைகள் நிலையானதாக இருப்பதோடு, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கும் நிலை உள்ளது. இதனால், நடப்பு காலாண்டில் விற்பனை கணிசமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|