பதிவு செய்த நாள்
15 அக்2020
02:46

புதுடில்லி : கொரோனாவால் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால், சில்லரை மற்றும் மொத்த வணிகத்தை, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டதாக, 'பியூச்சர்' குழுமத்தின் நிறுவனர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா பாதிப்புகள் துவங்கிய முதல் நான்கு மாதங்களில், 7,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இவ்வளவு பெரிய இழப்புடன், நிறுவனம் தாக்குப்பிடிப்பது என்பது இயலாத
விஷயம். மேலும், வாடகையை தொடர்ந்து கொடுக்க வேண்டும். வாங்கிய கடனுக்கான வட்டியையும் தொடர்ந்து செலுத்த வேண்டும் என்ற நிலை. கடந்த ஆறேழு ஆண்டுகளில், நிறைய நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறோம் நாங்கள். ஆனால், இப்போது வணிகத்தை விட்டு வெளியேறுவதை தவிர, வேறு விடை இல்லை.
சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு, இனி தான் சிரமமான காலம். எங்கள் இலக்கில், 90 சதவீதத்தை அடையும் வகையில் வணிகத்தை வடிவமைத்திருந்தோம். ஆனால், எந்த நிலையிலும், 70 - 80 சதவீதத்தை கூட தொட இயலவில்லை. இன்னும் நீண்ட காலத்தில், அதாவது, 5 முதல், 10 ஆண்டுகளில், 'ஆன்லைன்' தாக்கத்தால், ஸ்டோர்களை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பியூச்சர் குழுமத்தின் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிகத்தையும், கிடங்கு வணிகத்தையும், 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இதையடுத்து, 'பிக் பஜார், பேண்டலுான்' உள்ளிட்ட வணிகங்கள், ரிலையன்ஸ் வசம் வந்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|