பதிவு செய்த நாள்
17 அக்2020
22:11

சென்னை:நிலையான வைப்புத் தொகை உருவாக்குதல் மற்றும் பல்வேறு சேவைக் கட்டணங்களைச் செலுத்துதல் போன்றவற்றை, ‘வாட்ஸ் ஆப்’ செயலி வாயிலாக, இனி மேற்கொள்ளலாம் என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.
அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:எப்.டி., எனும் நிலையான வைப்புத் தொகை உருவாக்குதல் மற்றும் பல்வேறு சேவைக் கட்டணங்களைச் செலுத்துதல் போன்றவற்றை, வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக, வாடிக்கையாளர்கள் உடனடியாக மேற்கொள்ளலாம்.
மேலும், வர்த்தக நிதி தொடர்பான விபரங்களையும், வாட்ஸ் ஆப் வாயிலாக பெற முடியும். இந்த சேவைகள், நாட்டிலேயே ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மட்டுமே, முதல் முறையாக வழங்குகிறது. மின்சாரம், எரிவாயு மற்றும் மொபைல் போன்களுக்கான கட்டணம் உட்பட, பல்வேறு கட்டணங்களை இதன் வாயிலாக செலுத்தலாம்.
குறு, சிறு, நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பெரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு, வங்கியில் பெறப்படும் அனைத்து கடன் வசதிகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்ளுதல் உட்பட, பல்வேறு வர்த்தக சேவைகளையும் பெற முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|