பதிவு செய்த நாள்
17 அக்2020
22:18

சென்னை:‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில், நடப்பு ஆண்டில், இரண்டு லட்சம் ‘கிரெட்டா’ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில், நடப்பு ஆண்டில், இரண்டு லட்சம் கிரெட்டா கார்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுஉள்ளன.சர்வதேச வாடிக்கையாளர்களால், பெரிதும் விரும்பும் காராக கிரெட்டா உள்ளது.
இதனால், அதிக எண்ணிக்கையிலான கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, புதிதாக ஒரு மைல் கல்லை, கிரெட்டா எட்டி உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் துவங்கியது முதல், தற்போது வரை, 30 லட்சத்திற்கும் அதிகமான கார்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|