பதிவு செய்த நாள்
18 அக்2020
22:07

வருமான வரி தொடர்பான புதிய முறையை தேர்வு செய்பவர்கள், அதற்கான கூடுதல் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
புதிய வருமான வரி விகித முறை, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. புதிய வரி விகித முறையில், வரி வரம்பு குறைவு என்றாலும், பழைய முறையில் உள்ள சலுகைகள் மற்றும் பிடித்தங்கள் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.வரி செலுத்துபவர்கள் பழைய முறையை தொடரலாம் அல்லது புதிய வரி விகித முறையை தேர்வு செய்து கொள்ளலாம் என, வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தேர்வை மேற்கொள்வதற்கான வழிமுறை தொடர்பாக குழப்பம் நிலவியது. இந்தச் சூழலில், புதிய வரி விகித முறையை தேர்வு செய்ய விரும்புகிறவர்கள் வரி தாக்கல் செய்யும் போது, இதற்கான கூடுதல் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது.
படிவம் 10 ஐ.இ., எனும் பெயரிலான இந்த படிவத்திற்கான அறிவிக்கையும் வெளியாகியுள்ளது. வருமான வரி விகிதத்தை தேர்வு செய்த பிறகு, பழைய முறைக்கு மாறிக்கொள்ளும் சாத்தியம் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|