பதிவு செய்த நாள்
19 அக்2020
10:39

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல் நாளான இன்று(அக்.., 19) நல்ல ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு அதிகமாக வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.47 புள்ளிகள் உயர்ந்து 40,324.45ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 71.95 புள்ளிகள் உயர்ந்து 11,834.40ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதன் விளைவாக பங்குச்சந்தைகள் மேலும் ஏற்றம் கண்டன. காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 480 புள்ளிகளும், நிப்டி 110 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.
கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறையவில்லை என்றாலும் அதன் வீரியம் கொஞ்சம் குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கொடுத்து இருப்பதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி தொடங்கினர். மேலும் முன்னணி நிறுவன பங்குகள் பல ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.73.40ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|