இனி இந்தியா, சேமிப்பாளர்களின் தேசமல்ல இனி இந்தியா, சேமிப்பாளர்களின் தேசமல்ல ... போர்ப்ஸ் பட்டியலில்  என்.டி.பி.சி., இடம் பெற்றது போர்ப்ஸ் பட்டியலில் என்.டி.பி.சி., இடம் பெற்றது ...
நாளைய பொருளாதாரத்தைதீர்மானிக்கும், 20 சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
00:52

புதுடில்லி:நாளைய பொருளாதாரத்தை தீர்மானிக்கும், 20 சந்தைகளின் பட்டியலை, ஐ.எம்.எப்., எனும் உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது.


இது குறித்து, அதன் அறிக்கை:இந்த, 20 சந்தைகள் பட்டியலில், வைரஸ் தடுப்பூசிகள், விண்வெளிப் பயணங்கள், நீருக்கான உரிமைகள், அரிய நோய்களுக்கான மருந்துகள், கல்விக்கான தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, காடுகள் மீள் உருவாக்க சேவைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, மின்சார வாகனங்கள், பிளாஸ்டிக் மறுசுழற்சி, டிஜிட்டல் நிதி சேவைகள், ஹைப்பர்லுாப் அடிப்படையிலான போக்குவரத்து, புதிய தடுப்பு மருந்துகள் ஆகியவையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இந்த பட்டியலில் இருக்கும் சந்தைகளில் சில, தொழில்நுட்ப முன்னேற்றங்களை நம்பி இருப்பதாகும்.சில சந்தைகளுக்கு சமூகம் மற்றும் நிறுவன அமைப்புகளை சார்ந்திருக்கும் நிலை இருக்கும்.


இந்த இரண்டும் சேர்ந்து, சில சந்தைகளுக்கு தேவைப்படும்.நாடுகளைப் பொறுத்தவரை, நெதர்லாந்து, லக்ஸம்பர்க், டென்மார்க், ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகள், சமூக நிறுவன கண்டுபிடிப்புகளுக்கான மிக உயர்ந்த திறன் கொண்டவையாக இருக்கின்றன.

ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, கொரியா, பிரான்ஸ் ஆகியவை, திருப்புமுனை தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குவதற்கான திறன் கொண்டவையாக இருக்கின்றன. இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின், இஸ்ரேல், ரஷ்யா, சீனா ஆகியவை, இரண்டும் கொண்டவையாக இருக்கின்றன.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)