பதிவு செய்த நாள்
24 அக்2020
22:21

மும்பை:தங்க நகைகள் விற்பனை, தற்போதைய பண்டிகை காலத்தில், மொத்த விற்பனையில், 60 முதல், 65 சதவீதம் அளவுக்கு இருக்கும் என இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வாழ்க்கை மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்புவதால், மக்களும் படிப்படியாக நகை வாங்குவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர். இதன் காரணமாக, மொத்த விற்பனையில், 60 – 65 சதவீதம் அளவுக்கு, இந்த பண்டிகை காலத்தில் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, ஜி.ஜெ.சி., எனும், அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கவுன்சிலின் தலைவரான அனந்த பத்மநாபன் கூறியதாவது:இதற்கு முன், 20 – 25 சதவீதமாக இருந்த நகைகள் விற்பனை, கடந்த வாரத்தில், 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான திருமணங்கள், கடைசி காலாண்டுக்கு தள்ளிப் போடப்பட்டிருப்பதால், அதை முன்னிட்டு, இந்த காலாண்டில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், பெரிய அளவில் திருமண நிகழ்ச்சிகளை கொண்டாடாத காரணத்தால், தங்கத்தில் அதிகம் செலவழிக்கின்றனர்.இதன் தொடர்ச்சியாக, நாளை முதல் நகை விற்பனை அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கிறோம். மொத்த விற்பனையில் 60 – 65 சதவீதமாக அது இருக்கக் கூடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|