பதிவு செய்த நாள்
24 அக்2020
22:22

புதுடில்லி:கொரோனா காரணமாக, நாட்டில் முதன் முறையாக கார் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் வாகன விற்பனை மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இந்நிலையில், தற்போது தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை அடுத்து, மீண்டும் வாகன விற்பனை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.தேவையை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், வாகன விற்பனை, பண்டிகை காலத்தில் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது விற்பனை ஆகும் வாகனங்களில் பெருமளவு, முதன் முறையாக வாகனம் வாங்குபவர்களால் வாங்கப்பட்டதாகும் என்பது தெரியவந்துள்ளது.அண்மையில் விற்பனை செய்யப்பட்ட கார்களில், கிட்டத்தட்ட, 50 சதவீத கார்களை வாங்கியவர்கள், முதன் முறையாக வாங்குபவர்களாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மேலும், ஏற்கனவே இருக்கும் காருடன், கூடுதலாக ஒரு காரை வாங்குபவர்கள் எண்ணிக்கையும், 33 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, பாதுகாப்பை முன்னிட்டு, பொதுப் போக்குவரத்தை தவிர்க்கும் வகையில், புதிதாக வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|