பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு கிளாண்டு பார்மாவுக்கு அனுமதி பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு கிளாண்டு பார்மாவுக்கு அனுமதி ...  புதிய பங்கு வெளியீட்டில் ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம் ...
தடை வாங்கிய அமேசான் நிறுவனம் தவித்து நிற்கும் பியூச்சர் குழுமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
06:17

புதுடில்லி : நாட்டின் சில்லரை விற்பனை வர்த்தக சந்தையில், மிகப் பெரிய ஒப்பந்தமாகக் கருதப்பட்ட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – பியூச்சர் குழுமம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு, தடை விதித்திருக்கிறது, சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றம்.

தங்களை கலந்துகொள்ளாமல், தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்துகொண்டதாக, பியூச்சர் குழுமத்தின் மீது, அமேசான் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்:
அண்மையில்,‘ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை வர்த்தகம், மொத்த வர்த்தகம், கிடங்குகள் ஆகியவற்றை, 24,713 கோடிக்கு வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, பியூச்சர் குழுமத்தின், ‘பிக் பஜார், ஈஸிடே’ உள்ளிட்டவை, ரிலையன்ஸ் வசமாகும். மேலும் கிடங்கு வசதியும் அதிகரிக்கும். இதன் மூலம் சில்லரை வணிகத்தில், ரிலையன்ஸ் நிலை இருமடங்கு அதிகரித்து, போட்டி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, அமேசான் நிறுவனம், கடந்த ஆண்டு, பியூச்சர் குழுமத்தின், சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனமான,‘பியூச்சர் கூப்பன்’ நிறுவனத்தின், 49 சதவீத பங்குகளை வாங்கியது. மேலும், 3லிருந்து, 10 ஆண்டுகளுக்குள், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தையும் வாங்குவதற்கான முன்னுரிமையையும் பெற்றது. பியூச்சர் கூப்பன் நிறுவனத்திடம், பியூச்சர் குழுமத்தின், 7.3 சதவீத பங்குகள் உள்ளன.

இந்நிலையில், பியூச்சர் குழுமம் தன்னுடைய சில்லரை, மொத்த வணிகங்கள், சரக்கு போக்குவரத்து, கிடங்கு வசதிகள் ஆகியவற்றை ரிலையன்சுக்கு விற்றுவிடவே, அமேசான் சிங்கப்பூரிலுள்ள சர்வதேச நடுவர் மன்றத்தை அணுகி, தடை பெற்றுஉள்ளது.ஒரு நீதிபதி கொண்ட சிங்கப்பூர் நடுவர் மன்றம், முதற்கட்டமாக, பியூச்சர் குழுமம், இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும்; இறுதி தீர்ப்பு வழங்கும்வரை ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் இறங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமேசான் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பியூச்சர் குழுமத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, சர்வதேச நடுவர் மன்றத்தை அணுகிய எங்களுக்கு, துவக்க வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் கோரிய அனைத்து நிவாரணங்களையும் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

இத்தீர்ப்பு குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் தெரிவித்துஉள்ளதாவது:சில்லரை விற்பனைக்கான, முறைப்படியான ஆலோசனையின் படியே, பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் வணிகங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம்.மேலும், இந்திய சட்டத்தின் படியே அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ், பியூச்சர் குழுமத்துடனான ஒப்பந்தத்தை எந்த காலதாமதமும் இல்லாமல் விரைந்து முடிக்கவே விரும்புகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியூச்சர் ரீடெய்ல் நிறுவனமும் இந்திய சட்டங்களின் கீழ் இந்த ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யும் என தெரிகிறது.

எதிர்பார்ப்பு:
தற்போது இடைக்கால தடை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, சிங்கப்பூர் சர்வதேச நீதிமன்றம், மூன்று நடுவர்களைக் கொண்ட அமர்வை ஏற்படுத்தி, இவ்வழக்கு குறித்து விசாரித்து, தன்னுடைய தீர்ப்பை அடுத்த, 90 நாட்களுக்குள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஒப்பந்தம், இந்திய சட்டத்தின்படியே நடைபெற்றிருப்பதாக, ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் நிறுவனங்கள் கூறும் நிலையில், சிங்கப்பூர் நடுவர் மன்ற தீர்ப்பு, பல அடிப்படை அதிகார வரம்பு பிரச்னை களை எழுப்புவதாக அமைந்துள்ளது.

பங்கு விலை சரிவு:
அமேசான் தடை பெற்ற நிலையில், நேற்றைய பங்கு வர்த்தகத்தில், பியூச்சர் குழும பங்குகள் விலை, மும்பை பங்குச் சந்தையில், 10 சதவீதம் வரை சரிவைக் கண்டது. வர்த்தக இறுதியில், இந்நிறுவன பங்குகள் விலை, 5.8 சதவீத சரிவுடன், 73.85 ரூபாயாக குறைந்தது. இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலையும், 4 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு, இறுதியில், 2,028 ரூபாயில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)