பதிவு செய்த நாள்
28 அக்2020
11:20

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கின. ஆனால் சற்றுநேரத்திலேயே சரிவை சந்தித்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற, இறக்கம், முதலீட்டாளர்கள் பங்குகளை லாபநோக்கத்தோடு விற்க தொடங்கியது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன. வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 75 புள்ளிகளும், நிப்டி 30 புள்ளிகளும் உயர்ந்து இருந்தன. அதன்பின் சரிந்த பங்குச்சந்தைகள் காலை 11.10 மணியளவில் சென்செக்ஸ் 283.67 புள்ளிகள் சரிந்து 40,238.43ஆகவும், நிப்டி 67 புள்ளிகள் சரிந்து 11,822.40ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.73.75ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 1.78 சதவீதம் சரிந்து 40.87 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|